காந்தியடிகள் தனது கோட்பாடுகளுக்கு ஒரு வடிவம் கொடுக்க முயன்றபோது உருவான படைப்பே ஹிந்த் ஸ்வராஜ் எனப்படும் இந்திய சுயராஜ்ஜியம் என்னும் சிறுநூல். 1909 நவம்பரில், லண்டனிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பும் பயணத்தின்போது கப்பலில் காந்தியடிகள் இச்சிறுநூலை பத்தே நாட்களில் எழுதினார். வாசகர் கேள்வி கேட்பது போலவும், காந்தி பதில் சொல்வது போலவும் வடிவமைக்கப்பட்ட இந்நூல் குஜராத்தியில் எழுதப்பட்டது. […]