தமிழ்த் திரையில் கதாநாயகனைப் பார்ப்பது என்பது ஒரு முன் தீர்மானிக்கப்பட்ட வடிவமாக இருக்கிறது. பின்னணிக் காட்சிகள் எப்படி தீர்மானகரமானவையோ, கதைக்களம், நிகழ் காட்சிகள் என ஊகிக்கத் தக்கதானவை. சில ஓரங்க நாடகத் தொடர்ச்சி போல செல்லுலாய்டில் உறைந்து போயிருக்கும். பாத்திரங்கள் நாடகீகமானவையாக இருந்த காலம் முடிவுக்கு வந்த ஒருநாளில் ஓர் நகரப்பேருந்திலிருந்து அந்த இளைஞன் இறங்கினான். […]