எதிர்ப்புக்கலையின் சுருக்கமான வரலாறு – ஆண்ட்ரியா எமிலி. தமிழில் : கமலாலயன்.
நடப்பில் நிலவிவரும் அன்றாட நிலவரங்களின் மீதான அதிருப்தியுடன் அவற்றுக்கு எதிரான தனது எதிர்ப்புப் பிரகடனத்தை கலை எப்போதுமே பிறப்பித்துக் கொண்டு வந்திருக்கிறது. வரலாறு நெடுக, ஓவியக் கலைஞர்கள் தமது கலையை அநீதிகளையும், அசமத்துவங்களையும் விமரிசிக்கவும், அவற்றை எதிர்க்கவும் பயன்படுத்தியே வந்திருக்கின்றனர். அவர்களுடைய கலை மறுதலிப்பின் ஒரு நடவடிக்கையே; ஆனால், அதனிலும் மேலதிகமான முக்கியத்துவம் வாய்ந்த வகையில் விளிம்பு நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கும் மக்களுக்கு ஒரு குரலையும் வழங்குவதாயிருக்கிறது.
இந்தச் சுருக்கமான, ஆனால் வலிமை மிக்க புத்தகம் கடந்த எண்பது வருடங் களில் உருவாக்கப்பட்டவையாகிய ஆகச் சிறப்பான, பல்வேறு போக்குகளைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய படைப்புகளை வரைந்தளித்த ஓவியர்களுடைய உருவாக்கலைக் காட்சிப் படுத்தியிருக்கிறது. இந்தக் கலைஞர்கள் மரபார்ந்த எல்லைகளுக்குச் சவால் விடுத்தவர்கள்; வலிமையற்றவர்களுக்காகக் குரல் களை உயர்த்தியவர்கள்; மக்களுக்கு, அவர்களின் மனித உரிமைகளை நிராகரித்து வந்தவர்களுக்கு எதிராக ஒலிப்பதற்கான மக்கள் குரலாகத் தமது கலையைப் பயன்படுத்தி வந்தவர்கள். போர், வன்முறை, ஒடுக்குமுறை, பாலினம், இனரீதியான அசமத்துவங்கள், எய்ட்ஸ் பெருந்தொற்று உயிர்க்கொல்லி நோய், எல்ஜிபிடிக்யூ உரிமைகள், கருப்பின உயிர்கள் முதன்மையானவை இயக்கம் மற்றும் பருவநிலை மாற்றச் சிக்கல்கள்- இவை உள்ளிட்ட உலகளாவிய சிக்கல்களுக்கு எதிர்வினைகளாக உருவாக்கப்பட்டு பல்வேறு வகையான ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட படைப்பு களின் தேர்வு செய்யப்பட்ட தொகுதி இது. இவை முரண் நகை, பரிகாசம், பணிந்து போதல், ஆத்திரமூட்டுதல் போன்ற வெளிப்பாட்டு உத்திகளைப் பயன்படுத்தி ஆழமான விமரிசனப்பூர்வமான, அரசியல் உள்ளடங்கிய கலையைக் கொண்டிருப்பவை இந்த நூலிலுள்ள படைப்புகள்.
’எதிர்ப்புக்கலையின் சுருக்கமான வரலாறு’ நூல், அரசியல், சமூகப் பிரச்சினைகளுடன் முரண்பட்டு மோதும் செயல்முறையில் கலையின் முக்கியத்துவமிக்க வகிபாகத்தைவெளிப்படுத்துகிறது. மேம்பட்டதோர் எதிர்காலத்தை உருவாக்கு வதற்கு ஏற்றவாறு மக்களின் அணுகுமுறைகளை மாற்றுவதில் கலை எவ்வாறு உதவ முடியுமெனவும் வெளிப்படுத்துகிறது.
என் உழைப்புதான் என் எதிர்ப்பும் :
நாம் இன்றைக்கு எதிர்ப்பின் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வரலாறு நெடுகிலும் நிலவுகிற நடப்பு நிலைமையை எதிர்த்துப் போராடுவதற்கு மனிதர்கள் உண்மையில் தொடர்ந்து முயன்று வந்தேயிருக்கின்றனர் என்பதென்னவோ உண்மைதான். உண்மையில், உலகத்தை மாற்றிவிட வேண்டும் என்றேங்கும் உந்துதல்தான் மனிதராயிருக்க வேண்டுமென்ற விழைவின் மைய உந்துதலுமாகும். குகை ஓவியங்களின் மூலம் முதன்முதலில் நாம் பொறித்த முதல் குறியீடுகள் தொடங்கியே கலையின் வழி தகவல்களைத் தெரிவிக்க முடியுமென்ற திறனை மனிதர்கள் அங்கீகரித்திருந்தனர். அடுத்துத் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் பெற்றுணர்ந்த பட்டறிவின் மூலமே, மனிதர்களாகிய நாம் உலகை மாற்றியமைக்க முடியுமென்பதை உணர்ந்தனர். நாம்தான் பொருள்,நாம் ஒன்றிணைந்துதான் பொருளாகிறோம் என உணர்ந்த னர்.சமூக,சமுதாய மாற்ரத்திற்கான சிந்தனையின் மையமே இதுதான்.
கலை, உருவாக்கப்பட முடிந்த ஒன்று. ஓர் அர்த்தத்தில் கலை அரசியல் உள்ளடங்கியதாக இருக்காது என்பதில் அக்கூற்றுகள் முழுமையாகக் கேள்விக்குட்படுத்த முடியாதவை என்றே கருதப்படுகின்றன. குறிப்பாக, நாம் வாழ்கிற இன்றைய காலங்களைப் போன்ற காலகட்டங்களில் சமீபத்தில், உலகெங்கும் கலகத்தன்மையும், புரட்சிகரமான உள்ளடக்கங்களும் கொண்ட எழுச்சிகள், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தரத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி கிளர்ந்தெழுந்தன.காவல் துறைச் சீர்திருத்தங்கள், இனரீதியான சமத்துவம் தொடங்கி பருவ நிலை மாற்றம்,கருப்பின உயிர்கள் முதன்மையானவை இயக்கம் வரையில் பல கோரிக்கைகளுக்காக நடைபெற்ற இத்தகைய எழுச்சிகள்,மைய நீரோட்ட உலகின் கவனத்தில் ஒரு முக்கியத்துவமிக்க இடத்தைக் கோரின. இந்த முதன்மை இலட்சியங்களால் விடுக்கப்பட்ட ஆயுதங்களுக்கான அறைகூவல்கள் இதற்கு மேலும் நீண்ட காலத்துக்குப் புறக்கணிக்கப்பட முடியாதவை. குறிப்பாக, ஓர் உலகளாவிய நல வாழ்வுப் பெருந்தொற்றுப் பிரச்சினை நமது பல கண்ணோட்டங்களை அடியோடு இடம்மாற்றி விட்டது. காரணம், நம்மை நாமே கேட்டுக்கொண்டாக வேண்டிய கேள்விகளால் அலைக்கழிக்கப்பட்டு வருகிறோம். உண்மையில், என்னதான் பிரச்சினை ? நீண்டகாலமாக, இந்த உலகம் அரசியலற்றதாகவே இருந்துவிட வேண்டுமென்று விரும்பி வந்திருக்கிறது. அரசியலிலிருந்து நாம் நம்மைத் தூர விலக்கி வைத்துக் கொண்டிருப்பவர்கள். இரக்கத்தைக் கோரி இறைஞ்சி நிற்பவர்களாக நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். ஆயுதங்கள், வன்முறை, போர், நோய் ஆகியவற்றை பயங்கரம் நிறைந்த விஷயங்களாகவே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையிலும் அவை பயங்கரமானவைதாம். ஆனால் அவற்றைத் தவிர்ப்பதற்குரிய நடவடிக்கைகளைக் காரணகாரியங்களின் வரையறைக்குட்பட்டு நம்மால் மேற்கொள்ள முடியும். ஆனால், ஒரு முறை இரக்கத்தின் பிடியில் நம்மை ஒப்புக் கொடுத்துவிடும் பட்சத்தில், நாம் கட்டாயம் மாறித்தானாக வேண்டும். இரக்கத்திற்கு ஆட்படுவதுதான் உண்மையான அபாயமே. அரசியலற்றவராயிருப்பது … இவர்களுள் ஒருவராகி விடுவதிலிருந்து நம்மை நாமே தூர விலக்கிக் கொண்டு விட வேண்டியவர்களாக நம்மை ஆக்கிக்கொள்வது கட்டாயம்.
ஆனால், கலைஞராயிருப்பவருக்கோ, இரக்க உணர்வுக்கு ஆட்பட்டாக வேண்டிய அபாயம் இருப்பதில்லை. கலையின் வழியே, வலிமை நிறைந்த செய்திகளை வெளியிட்டு உலகுடன் தகவல் தொடர்பு கொள்ளவும், பரவலாக்க வும் தேவையான சுதந்திரம்,கலைஞர்களுக்கு வழங்கப்பெற்றுள்ளது. காரணம் கலையும், எதிர்ப்பும் அரசியல் சிந்தனையின் வடிவங்களே. நமது காலத்தின் அசமத்துவங்கள், அநீதிகள், உண்மைகளை வெளியுலகிற்கு வெளிப்படுத்திக் காட்டுவதற்கான உள்ளுறை வலிமையை இவையிரண்டுமே பெற்றிருக்கின்றன. ‘மை லேபர் இஸ் மை ப்ரொட்டெஸ்ட்’ என்பது இந்தக்கட்டுரையின் தலைப்பு. இதே தலைப்பில் தேஸ்டெர் கேட்ஸ்ஸின் கண்காட்சி 2012-இல் வெண் க்யூபில் நடைபெற்ற பிறகு இது இக்கட்டுரையின் தலைப்பாகவுமாயிற்று.
இந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கண்காட்சியில் கேட்ஸ்ஸின் படைப்பு : ’ரைசிங் கோலியாத்’. அரங்கின் மேற்கூரையிலிருந்து செவ்வியல் தன்மை மிக்க செம்மைத்தழல் விடும் ட்ரக் ஒன்றைத் தொங்க விடுவதற்காக நாடக அரங்கப் பொருள்களுள் இழுவை உருளைகளை அது பயன்படுத்தியிருந்தது. அதற்கு நேர் எழிலார்ந்த எதிர் முரணாகவும் இணக்கத்துடனும் ஒரு பெரும் உலோகப்பெட்டி யினுள் ஆப்பிரிக்க அமெரிக்கப் பத்திரிகைகளான ஜெட், எபோனி போன்றவற்றின் நூற்றுக்கணக்கான பிரதிகள், தோலுறைகளால் பைண்டு செய்யப்பட்ட நிலையில் நிறைத்து வைக்கப்பட்டிருந்தன. இவை வெளிப்படுத்திக் காட்டிய உண்மை : ‘கலை நம்மை மாற்ற வல்லமை படைத்தது எனில், அந்தக்கலையின் படைப்பாளியான கலைஞரின் உழைப்புத்தான் அந்த மாற்றத்தைச் சாத்தியப் படுத்தும், உற்சாகப்படுத்தும் ஆற்றல் கொண்டதாய் இருக்கும்’.
அந்த ஆவணக் காப்பகம் கருப்பின அடையாளத்தின் சில முதன்மையான பிரச்னைகளைக் குறுகத்தறித்துத் தொகுத்த வடிவில் முன் வைத்துக் காட்சிப்படுத்துகிறது. அது வரலாற்றின் அகவயப்பட்ட தன்மை, மானிட அனுபவத்தின் பல முனைகளை மறந்து விடுவதனை அதற்கு மிக எளிதாகி விடச் செய்கிறது என்பதற்குக் கூர்மையான நினைவூட்டலாகி விடுகிறது. நினைவூட்டுதலே எதிர்ப்பு; கேட்டலும், கற்றலுமே முன்னேற்றம்!. அந்த நிகழ்த்து கலையின் முக்கியப் படைப்புதான் ’மை லேபர் இஸ் மை ப்ரொட்டெஸ்ட்’ .
கேட்ஸ் ஒரு மஞ்சள் நிறத் தீ வண்டியை அரங்கின் முன்பகுதியில் நிறுத்தி வைத்திருந்தார். அதை ஒரு பகுதி அளவுக்குத் தாரினால் மூடி மறைக்கவும் செய்திருந்தார். தார் அடிமைத்தனத்தோடு இணைந்திருக்கும் ஒரு நீர்ம உலோகம். இந்தப்படைப்பு, மிகக்குறிப்பாக ‘பாய்க்னன்ட்’ ஆக இருந்ததற்குக் காரணம், அந்தத் தீ வண்டி அலபாமா பகுதியின் பர்மிங்ஹாம் நகரிலிருந்து பணியாற்றுதல் பொறுப்பிலிருந்து விடுவிக்கப் பட்ட ஒரு வண்டி என்பதால்தான். அந்தப்பகுதியில்,1963-ஆம் ஆண்டின் வசந்த பருவ காலத்தில், அமைதி நிரம்பிய முறையில் ஆர்ப்பாட்டங்களில் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் ஈடுபட்டிருந்த போது, அவர்களை எதிர் கொண்டு கலைத்து விரட்டுவதற்கு காவல்துறை நாய்களையும், குதிரைப்படைகளையும் பயன்படுத்தி மிகுந்த வன்முறையான விதத்தில் காவல்துறை உருவாக்கிய பயங்கரச் சூழலைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலை.
மேற்கண்ட ஆற்றல் மிக்க படைப்புகளின் மையமாகக் கருக் கொண்டிருந்த சிந்தனை என்பது கலைப் படைப்பின் மூலம் சமூக மாற்றம் ஏற்பட முடியும் என்பதே. கேட்ஸ்-இன் உழைப்புதான் அவருடைய எதிர்ப்பு !
மாற்றத்துக்குக் கிரியா ஊக்கியாகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டாக வேண்டியது கலைஞரின் கடமை என்று பிறகு ஏன் விதிக்கப்பட்டிருக்கிறது? காரணம், சமுதாயத்தை நிலை பெயர்ப்பதற்கான எல்லையற்ற உள்ளுறை ஆற்றலைக் கலை பெற்றிருக்கிறது என்பதால் ஒருவேளை இருக்கலாம். நம்மைக் கலை சோக் ஹோல்டில் பொருத்தும் வல்லமை வாய்ந்தது. நம்முடைய சிந்தனை களையும், நம்பிக்கைகளையும் சவாலுக்கு அழைத்து, அவற்றை மீள்கட்டமைப்புச் செய்யும். உலகைப்பற்றிய நமது புரிதல்களைச் சிக்கலுக்குட்படுத்தும். மாற்றமடைந்தவர்களாகவும், உத்வேகமுற்றவர்களாகவும் நம்மை விட்டு வைக்கும். வியந்து நோக்கவும்,கேள்விகளை எழுப்பவும் கற்றுத்தரும்.
எதிர்ப்புக்கலையை வரையறுத்தல் :
அரசியல் இயக்கங்களினால் கலை மேன்மேலும் அதிகமாக சிந்தனைகள், செய்திகள், நம்பிக்கைகள் ஆகியவற்றைச் சுற்றுக்கு விடும் ஊடகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.’தி டெத் ஆஃப் மாராட்’ என்ற ஓவியம் ஜேக்யூஸ் -லூயிஸ் டேவிட்-ஆல் 1793-இல் தீட்டப்பட்டது. இந்தப்படைப்பை நான் முதலாவது துல்லியமான அரசியல் ஓவியங்களில் ஒன்றாகக் கருதுகிறேன். பிரெஞ்சுப் புரட்சியின் அதிகாரப்பூர்வமான கலைஞர் டேவிட் மாராட் என்ற தனது நண்பரின் மரணத்தினை தெளிந்த ஓர் அரசியல் நோக்கத்துடன்தான் டேவிட் ஓவியமாக்கி இருக்கிறார். காலம் சென்ற நண்பருக்கு ஓர் அஞ்சலியாகவும், ஒரு புரட்சிகரமான பரப்புரையாகவும் இந்த ஓவியத்தை டேவிட் தீட்டியிருக்கிறார். மாராட்டின் கொலை தொடர்பான எதிர்வினையாக இப்புதிய செவ்வியல் ஓவியம் உருவாக்கப்பட்டது. மாராட் என்ற புரட்சிக்காரனை ஓர் அப்பழுக்கற்ற தியாகியாக வார்த்துக் காட்டியதன் மூலம், அவனுடைய அரசியல் செயற்பாட்டியம் நினைவு ஓவியமாகக்கப்பட்டிருக்கிறது. எதிர்ப்புக்கலை ஓவியத்தின் தொடக்க நிலைகளில் ஒலித்த முதல் வெற்றி முரசாகவும், காலத்தினை வரையறுத்து நிற்கும் பிம்பங்களில் ஒன்றாகவும் இவ்விரு வகையிலும் நிலை பெற்றிருக்கிறது !
உலகளாவிய, படிநிலைத்தன்மை வாய்ந்த, தரப்படுத்தப்பட்ட அரசியல் வகை மாதிரியின் குறியீடாகவே பல கலைஞர்களுக்குக் கலை தோற்றம் தருகிறது. ஓர் இரகசிய முகவரைப்போல் கலை செயல்படும்போது, அது பெரும்பாலும் ஒரு கச்சாப் பொருளாகவும், உள்ளுறை ஆற்றல் கொண்டதாகவும் இருக்கும். கலையழகுடனும் அல்லது வேறு ஏதேனும் ஒரு வேடத்துடனும் அது நம்மைக் கவர்ந்து ஈர்த்து மயக்குகிறது. பின் நமது உள்ளார்ந்த மரபுகளில் குறுக்கிடுகிறது. அவற்றுள் சில மரபுகள் சந்தேகத்திற்கிடமின்றி நம்மாலேயே அறியப்படாதவை ஆக இருக்கின்றன. நம்முள் ஊடாடி வரும் கலை மேலாதிக்கத்தின் வரலாறு களுடனும், சார்நிலைப்பண்புகளுடனும், உள்ளாக்கத்துடனும், வெளித்தள்ளுதலுடனும் இழையோடி நிறைகிறது. இந்தக்கலைப் பண்பு தோய்ந்த குறுக்கீட்டில் கலைஞன் அப்போதைய நிலைத்தன்மையைச் சவாலுக்கு அழைத்து அதை நிலை குலையச் செய்கின்றான்.
அறிவொளிக்காலத்தின் மாபெரும் மெய்யியலாளரான இம்மானுவெல் காண்ட், கலை இனங்காணப்பட்டு வீழ்த்தப்பட முடியாத விதத்தில் தொழிற்படவல்லது என்பதால், துல்லியமாக இந்த வல்லமைதான் கலையை அரசியல் பண்புடைய தாக ஆக்குகிறது. எதிர்ப்பின் ஒரு வடிவமாகக் கலை தொழிற்பட முடியும் என்ற சிந்தனைக்கு இது வழி வகுக்கிறது. தெளிந்த வாதத்துக்கான வெளியாக அரசியல் பண்புடைய சிந்தனை ஆகிறது என்கிறார். ஆகவே, அது கலையின் கட்டுப்பாடற்ற இயல்பிலிருந்தும், நெரிசலான தன்மையிலிருந்தும் தனித்துப் பிரிக்கப்பட முடிந்ததாகி விடுகிறது. நமது சமகாலச் சிந்தித்தலில், கலை தெளிவற்ற பண்புடையதாகவும், குழப்பமிக்கதாகவும், ஓரளவுக்கு நம் தலைக்குள் நெரிசலை உண்டாக்குவதாகவும் ஆகிறது. இந்தப்பண்புதான் கலையைக் கவர்ச்சித் தன்மையுடையதாக்குகிறது. ஆனால் கலையை அரசியல்ரீதியில் வலிமை நிறைந்ததாக்குவதே இந்தப்பண்புதான்.
அரசியல் அதிகாரத்திற்கும், கட்டமைப்புக்கும் எதிராக நடத்தப்படும் ஒரு போராட்டம் சிஸிபீன் ஆக, ஊடுருவிப்போக முடியாததாக,உருளும் ஆற்றலாகப் பார்க்கப்படும் வேளையில் நமது சிஸிபுஸ்ஸ் காலடியை ஒவ்வொருமுறை ஒரு தடைக்கல் வந்து விழும் போதும் ஒரு போதுமில்லாத அளவுக்கு அந்தப்போராட்டம் வியர்த்தமான, வீணான ஒன்றாகத் தோன்றும்.அப்போது எதிர்ப்புக்கலை, நம்பிக்கையொளியின் கலங்கரை விளக்காகப் பளிச்சிட்டு மின்னுவதன் மூலம் நாம் தொடர்ந்து முன்னேறிப் போக வழி காட்டுகிறது. நிலைபெயர்க்கப்பட முடிந்ததாக, தகர்க்கப்பட முடிந்ததாக அரசியல் அதிகாரக் கட்டமைப்பை சிறுமைப்படுத்துகிறது. பல கலைப்படைப்புகளின் மையத்தில் கேட்கவும்-காணவும்பட வேண்டிய ஓர் அழைப்பு-அறைகூவல் உறைந்திருக்கிறது.
‘எதிர்ப்புக்கலை’ என்ற சொல்லாடலின் வரலாற்றியல் எதிரொலிகளையும், இந்தக் கலை வடிவத்தின் சாத்தியங்களையும் கருத்திற்கொண்டு பரிசீலிக்கும் போது,1937-ஆம் ஆண்டின் குவெர்னிகா ( 1937 ) என்ற, பாப்லோ பிக்காசோவின் ஓவியப்படைப்பைப் பற்றி சிந்திக்காமலிருக்க ஒருவரால் முடியாது. ஆகச்சிறப்பு மிக்க படைப்புகளுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இட்டெரேஷன் ஆன இது, இந்தப்புத்தகத்தில் (ப.24) ஆராயப்பட்டிருக்கிறது. ஸ்பானிய உள்நாட்டுப் போரின் (1936-39) போது குவெர்னிகா என்ற பாஸ்க்யூ நகரின் மீது குண்டுகள் வீசப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகக் கிளர்ந்தெழுந்த கலைக் கலகமாக இந்த ஓவியம் அமைந்துள்ளது. அந்தத்தருணத்தின் குழப்பமும், காட்சிகளும் அடங்கிய க்ரேஸ்கேல் ஓவியம் பிக்காசோவின் குவர்னிகா. வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லாத அளவுக்குத் தனிப்பட்டதாகவும், அதனாலேயே அரசியல் பண்புடையதாகவும் அமைந்துள்ள உறைநிலைக் காட்சி, ஸ்பானிய உள்நாட்டுப்போரின் எதிர்ப்புப் போராட்டங்களுடன் ஊடிழைப்பாவாக இழையோடியிருக்கிறது. அதோடுகூட, பார்வையாளர்களோடும் ஊடாடும் பொருட்டுப் பல இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டு ஸ்பானியப் போர் நிவாரணத்துக்கான நிதி சேகரிப்புகளிலும் பங்காற்றியது. ‘ஓவியத்தில் எதிர்ப்பு’ என்ற செயல்முறையின் எபிடோன் ஆகத்திகழ்ந்த அது புரட்சியின் திருவுருவாகவும், புகழ்ப்பாரம்பரியம் பெற்றதாகவும் நீடித்திருக்கிறது.
நியூயார்க் நகரில் நவீன ஓவியத்தின் அருங்காட்சியகத்தில் 1970-ஆம் ஆண்டில் ஓர் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை குவெர்னிகா ஓவியத்தின் முன்பாக நடத்துவதென கலைப்பணியாளர்களின் கூட்டமைப்பு முடிவு செய்தது. வியட்நாம் போருக்கு எதிர்வினையாகவே இந்த ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்டிருந்தது. அவர்களுடைய நம்பிக்கை என்னவாக இருந்தது எனில், அருங்காட்சியகம் காம்ப்லிஸிட் ஆக இருக்குமென்பதும், அதோடுகூட போரைச் சூழ்ந்ததாக பிம்பக்கலாச்சாரம் இருக்குமென்பதுமே ஆகும். அந்தக்குழு ஓவியத்தின் முன்பாக நின்று கொண்டு அண்ட் பேபீஸ் என்று அறியப்பட்டிருந்த ஒரு புதிய கனோனிகல் சுவரொட்டியைக் கையிலெடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது. வியட்நாமில் மைலாய் படுகொலையின் போது ஓர் இராணுவப் புகைப்படக்காரரால் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படப் பிரதியை சுவரொட்டி தாங்கியிருந்தது.
படுகொலையைப் பற்றிய ஒரு நேர்காணலில் கூறப்பட்ட வாக்கியங்கள் மேற்கோளாக அந்தப்புகைப்படத்தின் ஊடாக இடம்பெற்றிருந்தன. ஏதுமறிந்திராத அப்பாவிப் பொதுமக்களின் படுகொலைகளை மூடி மறைக்காமல் வெளிப்படுத் திக் காட்டியதுடன், அத்தகைய அறிவுணர்வற்ற படுகொலைச் செயல்களுடன் முரண்பட்டு மோதும் இந்தச் சுவரொட்டி, மனிதத்தின் இருண்ட பக்கத்தை வெளிப்படுத்திக் காட்டுவதாயிருக்கிறது. இதன் வெளிச்சத்தில் கலையே உண்மையான ஓர் எதிர்ப்பு நடவடிக்கை என்பதாக நாம் கருதிக் கொள்ளலாமா?
ஒரு கலைஞரால் அரசியல் போரில் பொருதுவது போன்ற அதே மாதிரியான செயல் அல்ல எதிர்ப்பு. ஜோசஃப் பியூஸ் (1921- 1986 ) இதற்கு மாபெரும் ஓர் எடுத்துக்காட்டு. பசுமைக்காட்சியை சக நிறுவனராக இருந்து அமைப்பதற்கு முன்னதாக சூழலியல் பற்றிய விரிவுரைகளை அவர் ஆற்றி வந்திருந்தார். பசுமைக்காட்சியின் பாரம்பரியப்புகழ் இன்றளவும் நிலை பெற்று விளங்குகிறது. அவருடைய ஆகச்சிறப்புமிக்க, நீடித்து நிலை பெற்ற பணியாக இதனைக் கருதலாம். இந்தப் புத்தகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளபடி, மேற்கண்ட நடவடிக்கைகள் எல்லாமே தம்மளவில் எதிர்ப்புக்கலைப் படைப்புகளாகி விடுவதில்லை. ஆனால், அவை கலைச்செயல்பாட்டை சமூகச் செயல்முறையாக நீட்டி விரிவாக்குவதற்கும், கலை என்னவாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறதோ அதைச் சவாலுக்கு அழைப்பதற்கும் கலைஞரால் மேற்கொள்ளப்படும் முழுமைத்துவ அர்ப்பணிப்புணர்வின் மாபெரும் எடுத்துக்காட்டுகளாகின்றன.
இந்தப் புத்தகத்தின் நோக்கத்திற்கு, மேற்கண்ட பெரும் முயற்சிகளை எதிர்ப்புக் கலைப்படைப்புகளாக நான் கருதி அங்கீகரிக்கவில்லை. வரலாறு நெடுகிலும் ஒரு கலைப்படைப்பு என எதை நாம் அங்கீகரிக்கிறோமோ அதன் வரையறை, பண்புக்கூறுகள் மிக விரைவாகப் பரிணாம வளர்ச்சியுற்று மாற்றமடைந்து கொண்டே வருகின்றன. தொடர்ந்தும் இவ்வகை மாற்றம் நிகழ்ந்து கொண்டே தான் இருக்குமென்பதால் மேற்கண்ட வரையறையைக் கட்டாயம் விரிவாக்க வேண்டியிருக்கும் என்ற உண்மையை நான் கஞ்ஜெக்சர் செய்திருக்கிற போதிலும், இப்புத்தக நோக்கத்தினுள் மேற்கண்ட படைப்புச்செயல் முயற்சிகள் அங்கீகரிக்கப்படவில்லை. படைப்பூக்கம் நிறைந்த கலை என்பது ஒரு குடிமையியல் கலை-அதனுடைய கருதுகோளாக்கம், உருவாக்கம், வெளிக்காட்டுதல் ஆகியவற்றில் அது குடிமையியல் பூர்வமானது. எதிர்ப்பு என்பது நீர்மப் பண்புடைய, வலிமை நிறைந்த, மின்வெட்டுத்தன்மை வாய்ந்த, கிளறி ஆத்திரமூட்டும் தன்மையுடையது. அது எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும், திரும்பத்திரும்ப முன்வரும். சமூக ஒப்பந்தம் மீறப்படும்போது அது தோற்றந் தரும். நம்மைக் கட்டுப்படுத்த முற்படும் கட்டமைப்புக்கு அது ஒரு தொந்தரவு தருவதாயிருக்கும். அது ஒரு கலகம். அது ஒரு தொந்தரவு. ஏதேனும் ஒன்றை எதிர்கொண்டு சமாளிப்பதற்கு எனக்கோரி சமுதாயம் இருக்கும்போது அது மேலெழுந்து தோன்றும்.
எண்னிக்கையில் ஆற்றல் இருக்கிறது:
கூட்டமைப்புகள், பெண்ணியக் கலைக் குழுவான புஸ்ஸி ரியாட் போன்றவை எடுத்துக்காட்டுகள். இவர்கள் துணிவுடன் முன்வந்து அமைப்பை பன்க் பண்ணுமாறு கோருகின்றனர். ரஷிய அரசியலில் அதிகாரத்துவப் போக்கு தலையெடுத்திருக்கும் காலமாக 2012 முதல் 2015 வரையிலான காலம் பரவலாகக் கருதப்பட்டபோது அது நடந்தது. இந்தக்குழு உலகளாவிய புகழை செயற்பாட்டாளர்களின் குழு என்ற அளவில் எட்டியுள்ளது. இந்தக்குழு, பல்வேறு அரசியல் பிரச்சினைகளின்பால் கவனத்தை ஈர்த்து வருகிறது. இவர்கள் ஆகச்சிறப்பான முறையில் அறியப்பட்ட ஒரு நிகழ்வு எதுவெனில், மனித குலத்தின் பாதுகாவலர் கிறிஸ்துவின் தேவாலயத்தை முற்றுகையிட்டு அவர்கள் அதை அபகரிப்பு செய்ததுதான். அங்கு அவர்கள் தேவாலயத்திற்கும், அரசுக்குமிடையே நாளும் பெருகிவரும் நெருக்கமான பிணைப்புகளை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரகாசமான வண்ணங்களில் பாலக்லாவாஸ்களையும், பைகளைப் போல் உப்பிய மற்றும் இறுக்கமான உடைகளையும் அணிந்து கொண்டு பளீரென்ற வண்ணத் தோற்றங்களுடன் ஐந்து பேர் கொண்ட குழு, வாயிற்கதவு அமைந்த சுவரின் மீது ஏறிக்குதித்து நேராகப் பலி பீடத்தை நோக்கிச் சென்றனர். பலிபீடம் அமைந்துள்ள பகுதிக்குள் பெண்கள் நுழையக்கூடாது என்று மரபார்ந்த விதத்தில் தடை செய்யப்பட்டுள்ளனர். நேராகப் பலி பீடத்துக்குச் சென்று ஆடவும், பாடவுமாக அவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர் : “கடவுளின் அன்னையே, புதினை அப்பால் விரட்டுங்கள் !” பன்க் பிரார்த்தனை இது : “குறிப்பிடத்தக்க வகையில் ஜனாதிபதி தேர்தல்கள் நடத்தப்படப் போவதற்கு முன்னால்,வெறும் மூன்று நான்கு வாரங்களே அவகாசமிருந்த நிலையில், தங்களுடைய வாக்களிக்கும் அனுதாபங்களை அவர்கள் மிகத்தெளிவாகத் தெரிவித்து விட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்த போது மக்களின் கவனத்தைப் பெருமளவுக்கு அவை ஈர்த்திருக்கவில்லை. ஆனால், அவர்களின் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, நீதிமன்றத்தினால் அவர்களுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட செய்திகளை ஊடகங்கள் நெருக்கமாகப் பின் தொடர்ந்து மிகப்பரவலான கவனத்தை வழங்கின. ஆனால் அவர்களின் செயல் மிக உயர்நிலைப் புகழுடன் விளங்கும் கலைஞர்கள், பிற நாடுகளின் அரசுகள், பிரமுகர்களின் பேராதரவைப் பெற்றது. நியூயார்க், கனடா, ஸ்காட்லாந்து உள்ளிட்ட பல இடங்களில் உலகளாவிய ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் விதத்தில் பாலாக்லாவா ஸ்போர்ட்டிங் நேயர்களும், பரப்புரையாளர்களும் ஒருமைப்பாட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். கடைசியில் புதின் மூன்றாவது முறையாக ஆட்சியதிகாரத்தில் நீடித்திருப்பதற்கான வெற்றியை அடைந்தார். ஆனால், புஸ்ஸி ரியாட் குழுவின் உறுப்பினர்கள் இரண்டு பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்,ஏனைய மூன்று பேர் மீதும் குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில், அக்குழு இன்னமும் அரசு அமைப்பை உலுக்கிக் கொண்டிருக்கிறது. எதிர்ப்பு என்பது மாற்றத்துக்கு உற்சாகமூட்டும். ஆனால், மக்களுடைய பரந்து விரிந்த பரப்பெல்லைகளையுடைய அரசியல் மதிப்பீடுகள் ஒருபுறமிருப்பினும், வெடிப்புறப் பேசுவதும், பொதுவெளியில் அந்தக்குரல் கேட்கப்படுவதும் மானிட அனுபவத்தின் மையமாகத் திகழ்கின்றன. நம்மில் அனைவருக்கும் ஒரு செயற்பாட்டாளரின் பண்புக்கூறு உறைந்துள்ளது.
உண்மையில், ஆகச்சிறந்த எதிர்ப்புக்கலை நடவடிக்கைகளுள் சிலவற்றை நிகழ்த்தியுள்ள செயற்பாட்டாளர்களின் பெயர்களை நாம் ஒருபோதும் தெரிந்து கொள்ள முடியாமலே போகவும் கூடும். 1903-ஆம் ஆண்டில், உங்களுடைய மணி பர்சுகளில் நீங்கள் பல்வேறு நாணயங்களைக் கையாண்டிருப்பீர்கள். அந்த நாணயங்களுள் ஒன்றை நீங்கள் கூர்மையாக உற்றுக் கவனித்திருந்தால், அதன் மீது பொறிக்கப்பட்டிருந்த ஒரு முழக்கத்தைக் கண்டு பிடித்திருப்பீர்கள். ஒர் உரிமையைக் கோரும் முழக்கம் அது : “ பெண்களுக்கு வாக்குகள் தேவை!” என்ற வாக்கியம், அந்த நாணயத்தின் பளபளப்பான மேற்பரப்பில் புடைப்புருக்களில் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த நாணயங்கள் அக்காசாலையிலிருந்து பெறப்படும் துல்லியமான, சாதாரணப் பென்னிகளே. ( ஒரு நாணயத்தின் மேற்பரப்பில் உருக்களைப் பொறிப்பதோ, அழிப்பதோ மிகத் தீவிரமான கிரிமினல் குற்றமாகும்.)
நீங்கள் துளியும் எதிர்பார்த்திருக்காத போது, குடிமையியல் எதிர்ப்பின் வெளிப்பாடாக, ஒரு சிறிய மாற்றத்தின் வழியாக பரப்புரையாளர்களின் செய்திகளைச் சுற்றுக்கு விடுவதன் மூலம் அவை டிஸ்கிரீட்லி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. வெள்ளி நாணயங்களுக்குப் பதிலாக ஒரு சிறிய மாற்றத்தை முத்திரையிடுவதன் மூலம் செய்வது என்ற முடிவு குறிக்கோள் நிறைந்தது என்பது கவனிக்கத் தகுந்தது. இந்தச் செய்தி, வங்கிகளால் பொதுவெளியில் சுற்றுக்குப் போகாமல் திரும்பபெறப்பட்டு விடுவதற்கு வாய்ப்புக் குறைவாயிருந்திருக்க வேண்டுமென்பது குறிக்கோள். பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து அவை சுற்றில் இருக்குமென்பதை உறுதிப் படுத்திக் கொள்வது ! ஒரு வேளை பிற்பாடு 1928-ஆம் ஆண்டில் கடைசியாகப் பெண்களுக்கு வாக்களிப்பதற்கான சம உரிமையை வழங்கும் சட்டம் நிறைவேற்றப்படும்வரை, அதற்குப் பிறகும் கூட சுற்றில் நிலைத்திருக்கச் செய்வதன் மூலம் மேற்கண்ட எதிர்ப்பை நினைவு கூரும் விதமாக இந்த நாணயங்கள் இருந்திருக்கும் !
“அவை எல்லாவற்றையும் எரித்தாக வேண்டும். அது தழலுக்கு இரையாகி சுடரப்போகின்றது. அது அசிங்கமானது, ஆகவே பாதுகாக்கப்படக் கூடாதது. சில நல்ல விஷயங்களும் கூட ஏனையவற்றுடன் சேர்த்து எரிக்கப்பட்டு விடலாம்தான். அதனாலென்ன? பரவாயில்லை. ஒவ்வொரு துண்டும் அட்டும் அழுக்கும் நிறைந்த ஒட்டு மொத்தத்தின் ஒரு பகுதிதான். உங்களுடைய குழந்தைகளுக்காக நீங்கள் பசியுடனும், பயத்துடனும் இருக்குமாறு செய்வதற்காக ஒவ்வொன்றும் சதி செய்கிறது. இதற்கு மேலும் காத்திருக்க வேண்டாம்! காத்திருப்பது பலவீனம், பலவீனம்தான் அடிமைத்தனம். உங்களுக்கான ஓர் இடம் என்று எதையும் விட்டு வைத்திராத இந்த அமைப்பைத் தீயிலிட்டு வீழ்த்துங்கள் ! சாம்பலிலிருந்து வெற்றிச் செடிகளை வளர்த்தெடுத்து வெற்றி முழக்கமிடுங்கள் ! தீ எல்லாவற்றையும் எரித்துத் தூய்மையாக்கி, ஆற்றலை விடுவிக்கும். தீ, வெப்பத்தையும் வெளிச்சத்தையும் கொடுக்கும். உங்கள் டெலிவெரன்ஸ் இன் கொண்டாட்டமாகத் தீ இருக்கட்டும் ! தீப்பிழம்புகள் எதிரியைத் துரத்தித் துரத்தி விரட்டியடிக்கட்டும் ! மின்னல்கள் பளிச்சிட்டுச் கொடுக்கட்டும் ! ”
-ஜென்னி ஹோல்செர் -1950-இல் பிறந்தவர். லித்தோகிராப் காகிதச் சுவரொட்டி -தலைப்பு இல்லை(1979-1982).
கொரில்லாப் பெண்கள் (ப. 80), சில்டோ மெய்ர்லெஸ் (ப.50) ஆகியவற்றில் திருட்டுத்தனமான எதிர்ப்பும் கூடக் காணப்படுகிறது. அவற்றின் சரெப்ஷியஸ் சப்லிமினாலிட்டி என்பது மிகக் குறிப்பாக வலிமை நிறைந்தது . நீங்கள் துளிக்கூட எதிர்பார்த்திராத நொடியில் அது உங்களைத் தாக்கும். ஆகவே, எதிர்ப்புக்கலை இன்னதுதான் என்பதை வரையறுக்க, ஒரு கலைப்படைப்பின் அளவுகோல்களை நாம் பரிசீலிக்கலாம். அரசியலை எதிர்ப்பதற்கு அல்லது தொந்தரவு செய்வதற்கு, நன்கு இனங்கண்டறியத்தக்க அல்லது கனோனிக்கல் கலை வடிவங்களை அது பயன்படுத்தியிருக்கிறதா அல்லது இந்த உலகை வேறுபட்ட ஒரு முறையில் அணுகிக் காண்பதற்குப் பார்வையாளரை அது உற்சாகமூட்டுகிறதா அல்லது அவருக்குக் கற்பிக்கிறதா என்ற அளவுகோல்களைக் கொண்டு நாம் பரிசீலிக்கலாம். இதன் காரணமாகவே எதிர்ப்புக் கலையின் பெருமளவுப் படைப்புகள் வார்த்தைகளை உள்ளடக்கி யிருக்கிறது. அச்சிடப்பட்டதோ அல்லது புடைப்புருக்களின் வழியாகத் தொந்தரவுக்கு ஆளாக்குவதோ எதனுடையதுமான பிரபலமான மொழியாக அவை இருக்கின்றன போலும். (ஜென்னி ஹோல்செர், பக்கங்கள் 15,110) சந்தைப் படுத்துதலுக்கான காட்சி மொழியைத் தொழிற்படச் செய்தல் (பார்பரா க்ரூஜெர்,ப.84) அல்லது சஃப்ராகேஜின் பெயரால் நாணயங்களினுள் முத்திரையிடுதல். வார்த்தைகளே நம்மைக் கவ்விப் பிடிப்பவை. சடாரென்று நம்மைச் சிறைப்பிடிப்பவை போல் கவனத்தை ஈர்ப்பவை. இயல்பாகவே நமது கண்கள், எதிர்ப்படும் பிரதிகளின் மறைபொருளை விளங்கிக் கொள்ளவும், டெசிபெர் செய்யவும் தேடுபவையே. மரபார்ந்த வாசித்தல் முறைகளில் குறுக்கிட்டுத் தொந்தரவு செய்து, அதை வேறுபட்ட ஒன்றாகத் தோற்றமளிக்கச் செய்வதற்கு, நமது கவனத்தைக் கவ்விப் பிடித்து, தன்பால் தக்க வைத்துக் கொள்ளும் உத்தி இது.
எதிர்ப்புக்கலை எளிமைப்படுத்துவதில்லை. அதற்கு மாறாக சிக்கலானதாக்குகிறது. பார்க்கப்படாதவற்றையும், அறியப்படாதவற்றையும் நோக்கி நம்மை உசுப்பி முன்நகர்த்தும்.அல்லது அறியப்பட்டிருப்பவற்றை நோக்கிக் கேள்விகளை முன்வைக்கும். அந்த எதார்த்தத்தைக் கேள்விக்கு உட்படுத்துமாறு நம்மை உந்தித்தள்ளும். உலகைப் பற்றிய மாற்றுப் புரிதல்களும், நாம் இந்த வாழ்க்கையை வாழ்கிற ‘லட்சணமு’ம் நமக்குப் புரிபடக்கூடும். நமது எதார்த்தத்தை உலுக்கி எடுப்பதிலும், உலகத்திற்குப் புதிதாக மறுவிளக்கங்களைக் கொடுப்பதிலும், நமது சமுதாயத்திற்குள் தொழிற்படும் அதிகார உறவுகளைப் பட்டவர்த்தனமாகக் காட்டுவதிலும் கலைஞர் மேற்கொள்ளும் முயற்சி மறுமதிப்பீடு செய்யப்படுவதற்குத் தகுதியானது எதுவென்பதை நிர்ணயிப்பார். பர்மிங்ஹாம் அலபாமா பின் அங்கிருந்து பணிவிடுப்புச் செய்யப்பட்ட தீயணைப்பு வண்டியை உங்கள் கண்களுக்கு முன் நேரடியாகப் பார்க்க நேரும் போது, அந்தத் தருணம் எப்படிப்பட்டதாயிருக்கும் ? அந்தப் பயங்கரமான கதையை மீண்டும் உயிர்ப்புடன் கொண்டுவருமா? தீயணைப்புக் குழல்களின் உள்ளுறை ஆற்றலால் ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல்களால் அலறும் அவர்கள், தமது ஜனநாயக உரிமையை வெளிப்படுத்திய பிறகும் தாக்கப்பட்டுக் கதறுவதை உங்களால் கேட்க முடிகிறதா? இந்த எதார்த்தத்தை எதிர்கொள்ளும்போது அந்த உணர்வு என்னமாயிருக்கும்?
நீங்கள் ஒரு கட்டுரையைப் படிக்கலாம். ஆனால், மேற்கண்ட இத்தகைய பொருள்களின் தூலமான இருப்பு உங்களை எப்படிப் பாதிக்கும்? அவை உங்களுக்கு நேர் முன்னால் காட்சியளிக்கையில், அவற்றைப் பார்க்க முடியாதென நீங்கள் மறுக்கக் கூடுமா? கேட்ஸ் தன் படைப்பில் (ப.116-119) இத்தகைய எதிர்வினைகளைச் செயல்பூர்வமாக்குகிறார். ஆனால், மாராத்தின் (ப.10) சித்தரிப்பில் அதேபோல லியோன் கோலப் தன் சிறைப்படுத்துமளவுக்கு ஆற்றல் வாய்ந்த, காவல்துறையின் குரூரத்தன்மை பற்றிய பிம்பங்கள் (ப.76) வழியேயும், பிலிப் கஸ்டோன் தன வலிமை நிறைந்த படைப்பில் அங்கீகரித்திருக்கும் இனவாதத்தின் அறிவற்ற தன்மைக்கு-க்ளக்ஸ் -க்ளான் படையின் வெறுக்கத்தக்க, பயங்கரவாத நடத்தை (ப.46) பற்றிய சித்தரிப்பின் மூலமும் எதை வெளிக்காட்டியிருக்கின்றனர் ? அவர்களுடைய கலையின் மூலம், இந்தக் கலைஞர்கள் அநீதிகளுக்கும், அசமத்துவங்களுக்கும் எதிராக எதிர்ப்புணர்வை வெளிக்காட்டியிருக்கின்றனர். பார்வையாளர்களுக்காகப் பல்வேறுபட்ட வழிகளில் அவர்கள் கேள்விகளை முன்வைக்கின்றனர். எதிர்ப்புக்கலைக்கு ஒரு விமர்சனப்பூர்வமான உள்ளுறைக்கூறு இருக்கிறது அல்லது தார்மிக நெறிப்படுத்த முற்படும் நோக்கமும் இருக்கிறது. சுருங்கக் கூறினால், கலை அல்லது கலைஞர் அரசியல் மாற்றங்களைத் தேடிக் கட்டாயம் கிரியா ஊக்கியாகச் செயல்பட்டாக வேண்டியிருக்கும். எதிர்ப்பின் கலை வடிவங்களுள் ஆகப்பெரும் ஜனநாயகப்பூர்வமான ஒரு வடிவம் –சுவரொட்டி.
1968, மே மாதத்தில் பிரான்சின் பிரிட்டனிலுள்ள லீ கோல் டெ பீக்ஸ் -ஆர்ட் டில் இருந்து வந்திருந்த மாணவர்களுடைய பிரிவொன்று, பல்கலைக்கழக நிர்வாகிகளோடும், போலீஸாருடனும் நேர்ந்திருந்த மோதல்களுக்கு எதிர்த்தாக்குதல்கள் என்ற வகையில் மாணவர் வேலைநிறுத்தங்களின் வரிசையை ஒருங்கமைத்திருந்தனர். ஜெனரல் டி – கல்லியின் தலைமையிலான அரசாங்கம், மாணவர் வேலை நிறுத்தங்களை நிறுத்துவதற்கு வலிமை நிறைந்த காவல்துறைக் குறுக்கீட்டின் மூலம் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அந்த நடவடிக்கைகள் சூழ்நிலையை மேன்மேலும் மோசமாக்குவதில்தான் போய் முடிந்தன. மேலும் அதிக அரசியல் தன்மை வாய்ந்த குறைகளாக கோரிக்கைகள் பரிணமித்தன. அவை ஒரு புரட்சியை நோக்கி உந்தித்தள்ளின. மே -13 ஆம் நாளன்று மாணவர்களால் ஒரு பொது வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. வெகு விரைவில் பிரெஞ்சுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்தனர். இவற்றின் விளைவாக அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பதினோரு மில்லியன் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக வேலை நிறுத்தங்களில் இறங்கினர். அரசாங்கமே நிலை குலைந்து தகர்ந்து போகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அதோடு உள் நாட்டுப் போர் மூளக்கூடும் என்ற அச்சத்துக்கு ஆளானது. பொதுத் தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் ஏற்கெனவே பெரும் தொந்தரவுக்குக் காரணமாயிருந்தன. பழைமைவாதத்திற்கும், அதிகாரத்துவவாதத்திற்கும் வழிவகுத்த அரசியல் நகர்வுக்கு எதிராக உழைக்கும் வர்க்கங்கள் உந்தித்தள்ளப்பட்டிருந்தன. மாணவர் எதிர்ப்புகளுக்குத் தொடரிணையாக நிகழ்ந்த பிந்தைய வேலை நிறுத்தங்கள், ஆகப்பிரம்மாண்டமான மாபெரும் பொது வேலை நிறுத்தங்களில் போய் முடிந்தன. பிரெஞ்சு வரலாற்றில் முதலாவது வைல்ட் கேட் வேலைநிறுத்தமாக அது ஆனது.
இந்தக் காலகட்டத்தின் போது பாரிஸின் தெருக்களை நிரப்பியிருந்த சுவரொட்டிகள், அக்காலகட்டத்தினை வரையறுத்துக் காட்டிய பிம்பத் தொகுதியாய் ஆயின. அதிலிருந்து அதைத் தொடர்ந்து வந்த எதிர்ப்புப் பிம்பத் தொகுதியை மேற்கண்ட பாரிஸ் சுவரொட்டிகள் மாபெரும் அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தின. ஒவ்வோர் இரவுக்குப் பின் தொடர்ந்து வந்த ஒவ்வோர் இரவிலும் தங்களைப் புத்துணர்வூட்டிக் கொண்ட அடெலியர் பாப்புலைர் எனத் தனக்குத் தானே பெயர் சூட்டிக்கொண்ட பிரிவு பாரிஸின் லித்தோகிராபி ஸ்டூடியோ ஒன்றைக் கைப்பற்றிக் கொண்டிருந்தது. வால் பேப்பர் பாரிசுக்கு, பல்லாயிரக்கணக்கான சுவரொட்டிகளை வடிவமைத்தும், அச்சிட்டும் தொடர்ந்து விநியோகித்துக் கொண்டே ஆயுதங்களை ஏந்துமாறு தமது அறை கூவலையும் விடுத்துக் கொண்டிருந்தனர். செய்தியின் மீது கவனம் குவிக்கச் செய்வதற்கு உகந்த எளிமைத்துவத்தை மேற்கண்ட சுவரொட்டி வடிவமைப்புகள் சுவீகரித்துக் கொண்டன. வழக்கமாக ஒரு வண்ணத்தில் அச்சிடப்படும் வடிவமைப்பை இந்தச் சுவரொட்டிகள் சுவீகரித்துக் கொள்வது வழக்கமாக இருந்தது. விரைவாகத் தயாரிப்பதற்கு உகந்த, அதை விடவும் விரைவாக விநியோகிப்பதற்கேற்ற, புத்திளமைத் தோற்றம் வாய்ந்த முரடான வடிவை எடுத்துக் கொள்வனவாயிருந்தன(ப.6,ப.17). இந்தச் சுவரொட்டிகள், மேற்கண்ட எதிர்ப்புக் கலாச்சார இயக்கத்தின் அபோதியோசிஸ்- னுடைய ஆற்றலையும், அவசரத்தையும் பிரதிநிதித்துவப் படுத்துபவையாக இருந்தன. தயாரித்து முடித்துப் பெறப்பட வெண்டும், உடனே அவற்றைத் தெருக்களுக்குக் கொண்டு போக வேண்டும் ! பாரிசில் நிகழ்ந்த 1968-ஆம் ஆண்டு எழுச்சிகள் அன்றைய காலகட்டத்தில் நிகழ்ந்த எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஒற்றை எடுத்துக்காட்டே தவிர,வேறில்லை.
அமெரிக்காவில் நடைபெற்ற வியட்நாம் போர் எதிர்ப்புப் போராட்டங்கள், ஸ்பெயினில் ஃப்ராங்கோவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் போன்றவை ஏககாலத்தில் நிகழ்ந்திருந்தவை. அமெரிக்காவில் கருஞ்சிறுத்தைகளின் இயக்கம் ஆதரவு நீரோட்ட அலையில் மிதக்கத் தொடங்கிய காலகட்டமாகவும் இது இருந்தது. அப்போது இங்கெல்லாம் காற்றிலேயே புரட்சியின் மணம் கமழ்ந்தது. அரசியல், சமூகவியல் மாற்றங்களின் காலம் அது. புரட்சிகரமான கலைக்கு இந்த இயக்கங்கள் உத்வேகமூட்டின. அக்கலையோ தன்னளவிலேயே எதிர்ப்புக் கலையாக இருந்தது. கலையோ அல்லது கலைஞரோ குறிப்பிட்ட ஓர் அரசியல் இயக்கத்திலோ அல்லது மனித நேயமிக்க அமைப்புகளிலோ உறுப்பினராகத்தான் இருக்க வேண்டுமென்பதோ, நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்திருக்க வேண்டுமென்பதோ அவசியமில்லாதது. ஆனால், அவர்கள் அவற்றுக்குக் கிரியா ஊக்கிகளாகத் தொடர்ந்து செயல்புரியக்கூடும். குறிப்பிட்ட பிரச்னைகளின் மீது குவி விளக்கொளியைத் திருப்புவதன் மூலமோ அல்லது அறியப்படாத பிரச்னைகளை மேலெடுத்துச் செல்வதன் முலமோ அவர்கள் செயல்படமுடியும். ’ட்ரோபீஸ் ஆஃப் எம்பயர்’ 1872-74 (ப.19) எனும் படைப்பு இதற்கு ஆகச்சிறந்த ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
ஷெல்புகளின் வரிசையமைந்த மர அலமாரியின் அறைகளில் வெவ்வேறு அளவுகளிலான உருளை வடிவக்கோப்பைகள் சீராக அடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சிக்கலான படைப்பு, நினைவுகூரும் சிந்தனையையே கேள்விக்குள்ளாக்குகிறது. இப்படைப்பின் தலைப்பு, கலைஞர் மேற்கொண்ட மையமான விசாரணைகளை வெளிப்படுத்திக் காட்டுகிறது. துப்பாக்கிக் குண்டுகளைப் போன்ற இப்பொருள்கள், பன்முகத் தன்மை வாய்ந்த உறைகளில் பொருத்தப் பட்டுள்ளன. மெழுகுவர்த்தி ஸ்டாண்டுகள், ஒரு வெற்றிக்கோப்பை உள்பட மேற்கண்ட உறைகள் பலரகமானவை. இவை காலனியத் தத்துவத்துடனும், அடிமைத்தனத்துடனும் தொடர்புடையவை. இந்தக்கோப்பைகளெல்லாம் யாருடையவை என்ற கேள்வியை எழுப்ப வருமாறு லோக்கி நம்மை அழைக்கிறார். பேரரசின் எந்தெந்த அம்சங்கள் நினைவுகூரப்படுகின்றன, கொண்டாடப்படுகின்றன, பேரரசு பாராட்டப்பட வேண்டியதாக, கொண்டாடப் பட வேண்டியதாக உண்மையில் ஏதேனும் உள்ளடக்கம் கொண்டதுதானா என்ற அம்சம் ஆராயப்பட வேண்டிய ஒன்று.
இந்தப் புத்தகத்தில், கலைஞர்களால் எதிர்ப்பு என்று உருவாக்கப்பட்ட கலைப்படைப்புகளை நான் ஆராய்ந்திருக்கிறேன். எதிர்ப்பு நடவடிக்கையை கலை எனவும், எதிர்ப்பே கலை எனவும் வெளிப்பட்டவற்றின் எச்சங்களையும் ஆராய்ந்திருக்கிறேன். உள்ளிணைக்கப்பட்ட கலை, எதிர்ப்பின் கடந்த 80 ஆண்டுகளைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. காலம், புவியியல் இரண்டையும் ஸ்பான்னிங் கணக்கில் கொண்டதாயிருக்கும் படைப்புகள் மிகப்பெரும் பிரச்னைகளை எதிர்கொள்கின்றன. சமூகவியல், அரசியல், சூழலியல் சார்ந்த பிரச்னைகள் இவை. இவற்றில் சில வரலாறு நெடுகிலும் மானிடத்தின் நரம்புகளில் ஊடுருவித் துடித்துக்கொண்டிருப்பவை.
இந்தப் புத்தகத்தில் என்னால் தொட முடியாமல் போன அம்சம் எதுவெனில், வடிவத்தின் தேவை கருதி, இத்தகைய வலிமை நிறைந்த கலைப்படைப்புகளின் வாயிற்காவலர்களாக விளங்கும் அருங்காட்சியகங்களின் கடமை என்ன என்ற அம்சம் மட்டுமே. இந்தச் சுருக்கமான ஆய்வில் உள்ளடங்கியுள்ள கலைப்படைப்புகளுள் பல, பொதுவெளிகளில் இருந்தன அல்லது இருக்கின்றன. பெருந்திரளான மக்களைச் சென்று சேர்வதற்குரிய உள்ளுறை ஆற்றலையும், உடனடித் தன்மையையும் கொண்டவையாக இருந்திருக்கின்றன. ஆனால், நாம்-நமது அருங்காட்சியகங்களும், காப்பாளர்களும் ஒன்று போல கட்டாயம் அறிந்திருப்பது என்னவென்றால், கலாச்சார நிறுவனங்கள் ஆட்சியதிகாரத்தின் கட்டமைப்புகளுள் அடங்கியவை. அவற்றைக் கட்டுப்படுத்தக் கூடாது என்றுதான் எதிர்ப்புகள் கோருகின்றன. இதை அங்கீகரிக்கும் விதத்தில், அருங்காட்சியகங்கள் நடு நிலைத்தன்மையை விட்டு விலகியிருந்தாக வேண்டியது கட்டாயம். கலைஞர்கள் உலகைப் பார்க்கும் விதத்திலிருந்தும், எதிர்காலத்துக்கும் நாம் அனைவரும் ஏராளமாகக் கற்றுக்கொண்டாக வேண்டியதிருக்கிறது. நமது லாரல்ஸ் மீதே நாம் சாய்ந்து கொண்டிருக்க முடியாது. நாம் கட்டாயம் வளச்சியடைந்துதான் தீர வேண்டும். போராடித்தான் தீர வேண்டும் !
கலை, பெரும்பாலும் கற்பனாவாதப்பண்பு கொண்டதாயிருக்கும். என்னவாக இருக்கிறது என்பதும், அது கட்டாயம் என்னவாக இருக்க வேண்டுமென்றும் இருக்கிற சிந்தனையை வைத்துத் தொழிற்படுவதாயிருக்கும். கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்வதற்கு முயன்று பார்ப்பதும், புதிய எதார்த்தங்களை முன்மொழிவதும், கடந்த காலத்தை அகழ்வாய்வு செய்வதன் மூலம் உலகின் எட்டப்படாத உள்ளுறை ஆற்றல்களைப் பிரதிபலிப்பதுமாக கலை தொழிற்படும். எதிர்ப்புக்கும், அரசியல் நடவடிக்கைக்கும் கலை கொண்டு வரக்கூடிய உண்மையான ஆற்றல்களுள் ஒன்று இது.
கலையுடன் கலைஞர்கள் இதுவரை இருப்பில் இல்லாத ஒன்றை உருவாக்க வேண்டுமென்ற ஓர் அவசரத்தேவையை இனங்கண்டறிய முயன்றனர். அந்தத் தொலைநோக்குப் பார்வையை உலகத்துடன் பகிர்ந்து கொள்கின்றனர். உலகத்துக்கு விடுக்கப்பட்ட ஒரு சவாலிலிருந்து குதூகலம் நிறைந்த கொண்டாட்டமாயினும், விமரிசனமாயினும் கலை மேலெழுந்து தோன்ற வேண்டும். அத்தகைய சவால்கள் எவையுமில்லாமல் உலகம் வெறுமனே இயங்கிக்கொண்டிருக்க முடியாது. எதிர்ப்புக் கலையோ, அந்தச் சவாலுடன் மேலும் கூடுதலான பண்புகளுடன் பெரும் சவாலாக முன்னகரும். எதிர்ப்புக்கலை நம்மை உலுக்கி எழுப்பி விடுவதற்கேற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த உலகத்தை வித்தியாசமான முறையில் பார்க்க வல்லவர்களாக நம்மை அது ஆக்குகிறது. நிகழ்ச்சிகள், வரலாற்றின் அகவயப்பட்ட தன்மை, எந்தவிதக்கேள்வியும் இன்றி, அனைவராலும் ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டாற்போன்ற பாவனையுடன் முன் வைக்கப்படும் விவரணைகள் இவை யாவுமே கலையின் மூலம் மிகத்தீவிரமாக புலன் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. எதிர்ப்பு என்பது ஓர் உரையாடல். ஆகவே, எதிர்ப்பின் வலிமை/ஆற்றல் என்பது வெறும் தூலமான பொருள்களின் மீது மட்டுமே சாய்ந்து கொண்டிருப்பதல்ல. மாறாக, அவை குத்திக்கிளறி விடுகிற சிந்தனைகளின் மீதும், உரையாடல்களின் மீதுமே அந்த வலிமை சார்ந்து நிற்கிறது. மாபெரும் எதிர்ப்புக்கலையின் நீடித்து நிலைத்திருக்கும் பாரம்பரியம் என்பது அதுதான் !