எழுபதுகளில் வந்திருந்தக் கவிதை..!
Posted On November 10, 2020
0
118 Views
இரா.மோகன்ராஜன்
என்னைச் சந்தித்தது நல்லூழ்
என்கிறீர்கள்
நீங்கள்.
எப்படி என்கிறேன் நான்.
ஆஷ்டிரேயை எடுத்து
சிகரெட் சாம்பலை
உதிர்த்தபடியே
கண்சிமிட்டிச் சொல்கிறீர்கள்
இல்லையென்றால்
இந்தச் சிகரெட்டிற்கு
வேலைப்பாடமைந்த
ஆஷ்டிரே கிடைத்திருக்குமா
என்று.
அது சிகரெட்டுக்கான
ஊழ் இல்லையா
என நினைத்துக் கெள்கிறேன்
நான்.
ஆஷ்ட்ரேயே ஊழ்தான்
என்கிறீர்கள் நீங்கள்.
இப்படியானக் கவிதையின்
காலம்
முடிந்துவிட்டது
என்று சுட்டுகிறேன் நான்.
சிகரெட்டும்
அதன் சாம்பலும்
இருக்கும் வரை
புதுப்புது மோஸ்தர்களில்
ஆஷ்ட்ரேக்கள் இருக்கும்
என்கிறீர்கள் நீங்கள்.
எழுபதுகளின்
கவிதைச் சாம்பல்களை
சாம்பல் கவிதைகளை
சாம்பல் நிரம்பிய
ஆஷட்ரேக்களை
ஆஷ்ட்ரே நிரம்பியக்
கவிதைகளை
என்ன செய்வதென்று
சொல்லவில்லை.
Trending Now
மரணிக்க மறுத்த பேராசிரியர் சாய்பாபா
November 4, 2024
பேராசிரியர் G.N. சாய்பாபா கவிதைகள்
November 4, 2024