அதிகாரத்தில் இருப்போரோடு அல்லது புகழ் வெளிச்சத்தில் இருப்போரோடு தம்மை அடையாளப்படுத்துதல் வெகுமக்களின் பண்புகளுள் ஒன்று. தமிழ் மக்களிடத்தே இத்தகைய பண்பு சற்று தூக்கலாகவே உள்ளது எனக் கூறிவிட முடியும். ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தமிழ் மண்ணில் முளைவிட்ட காலகட்டத்தில் போராளிகளைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய தமிழ் மக்கள், 1986 இல் விடுதலைப் புலிகள் சக இயக்கமாகிய […]