நாற்பது ஆண்டுகள்
Posted On November 15, 2021
0
33 Views
ச.மருது துரை
‘இருபதில் சோசலிஸம் பேசாதவனும்
அறுபதில் சோசலிஸம் பேசுறவனும்
முட்டாள்கள்’
இப்படி ஒரு பெரியமனிதர்
சொன்னதாய்
இருபதுகளில் நண்பன் ஒருவன்
சிலாகிக்க
வழக்கம்போல் அன்று சிரித்து
கலைந்தோம்
அவரவர் பயணம்
அவரவர் திசை
பிரிந்து வளைந்து
நெளிந்து நிமிர்ந்து
வட்டியும் முதலுமாய் வாழ்க்கை
இருபதின் லட்சியம்
இளமை மாறாதிருக்குமா ?
இன்று நாங்கள் அறுபதை
நெருங்கிவிட்டோம்
தலை நரை கருப்பாக்குவதிலும்
வழுக்கை மறைப்பதிலுமான
பேச்சுக்கள் நடுவே
இருபதுகளின் சோசலிஸக் கனவை
நான் நினைவூட்ட
‘போடா முட்டாள்’ ஆகிறேன்
அன்று சிலாகிக்கப்பட்டது
இன்று வாக்குமூலம் ஆனது
இப்போது புரிகிறது
வாக்குமூலங்கள் பலவகை
இருபதையும் அறுபதையும்
குறித்த வழக்கு மொழியும்
இன்று நானும்
இவ்வாறாக இன்றும் நானொரு
சோசலிஸ்ட்
Trending Now
மரணிக்க மறுத்த பேராசிரியர் சாய்பாபா
November 4, 2024
பேராசிரியர் G.N. சாய்பாபா கவிதைகள்
November 4, 2024