இறந்தவனின் பெயர்
Posted On October 24, 2021
0
119 Views
-இரா.மோகன்ராஜன்
இறந்தவனின் பெயர் சொல்லி அழைப்பது அத்தனை எளிதல்ல. அவனது நினைவுகளைப் போன்று கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்லும் பெயர்களுக்கும் ஏனோ பொருளிருப்பதில்லை. இப்போது. இறந்தவனின் உயிர்ப்பு நிறைந்த காலங்களுடன் பெயர்களும் மரித்துதான் விடுகின்றன போலும். மாரிசாமி இன்று இல்லை ஆனால் மாரிசாமிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மாரிசாமியாய் இல்லை. மாரிசாமி பெயரில் இருக்கிறானா பெயரில் இருப்பவர்கள் எல்லாம் மாரிசாமிகள்தாமா? மாரிசாமி என்று அழைத்துப் பாருங்கள் மாரிசாமிபோல இருப்பதில்லை. யாரே இல்லத இடத்தில் பெயர் சொல்லி அழைப்பது போல காற்றில் நின்று கரைந்துவிடுகிறது இறந்தவனின் பெயர். மாரிசாமிகளைப் பெயரோடும்தாம் அடக்கம்செய்கிறோம் பெயரோடுதாம் எரித்துவிடுகிறோம். இறந்தவனின் பெயரில்தாம் எல்லாம் இருக்கிறது இறந்தவனின் பெயரும் இறந்தவனையும் தவிர...
Trending Now
மரணிக்க மறுத்த பேராசிரியர் சாய்பாபா
November 4, 2024
பேராசிரியர் G.N. சாய்பாபா கவிதைகள்
November 4, 2024