நகர்ப் பெருக்கத்தின் இடர்கள் மற்றும் களையும் முறைகள்
–ஆர். பாலகிருஷ்ணன்
நகர்மயமாதல் வேகமாக நடந்து வரும் இந்நிலையில் பல்வேறு இடர்களை நாம் மனதில் கொள்ளவேண்டும். பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக நகர் நோக்கி செல்வது தவிர்க்க இயலாதது ஏனெனில் நகரில் மட்டுமே மக்களுக்கான பணிகள் அதிகமாயுள்ளன அதே சமயம் கிராமப் புறங்கள் உலகெங்கிலும் கைவிடப்பட்டு வருகின்றன… அவை அரசின் திட்டங்கள் ஆகட்டும் அல்லது தனியார் நிறுவனங்களாகட்டும் எவையும் கிராமப் புறங்களை மனதில் கொள்வதில்லை. கிராமப் புறங்கள் அரசின் ஓட்டு வங்கிகளாகவே உள்ளன அங்கே சாதியம் என்னும் பொய்மை எளிதில் கட்டப்பட்டு மக்கள் மெய்யான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பப் படுகின்றனர் .
நகரப் பெருக்கம் என்பது இன்று அசுர வளர்ச்சி பெரும் நிலையினில் அது ஊரக எளிமை மனிதர்களின் குரல்வளையை நசுக்கியே நிகழ்கிறது. நகரங்கள் மக்களின் நடைபாதையினையும் நிழல் தரும் மரங்களையும் நீக்கி அது செல்வச் செழிப்பானவர்கள் மட்டுமே வாழ்வதற்குரிய இடமாக நிர்ணயம் செய்வதோடு அங்கு இரவில் உறங்கும் அப்பாவி விளிம்பு நிலை மனிதரின் வாழ்விற்கும் உத்தரவாதமளிப்பதாகமில்லை.
நகரம் என்பது நவீன மனிதனின் இன்றியமையாக் கனவாகவும் அதுவே சிறந்த வாழ்நிலை பேணும் இடமாகவும் நுகர்வு மனோ நிலை உருவாக்கப்படுகிறது. இதனை முதலாளித்துவ ஊடகங்கள் நன்கு முன் மொழிகின்றன.
விளம்பரப் படமொன்றில் ஒரு குழந்தையுடன் வரும் பாதசாரியினைக் கண்டு ஒரு பைக் ஓட்டி நிறுத்துகிறான் உடனே. பாதசாரிகள், குழந்தைகள் போக்குவரத்திற்கு எவ்வளவு அபாயகரமானவர்களென்பது அத்திரைப்படம் மூலம் வெளியாகும் செய்தி. நடைபாதையில் நடந்து செல்பவர்களை வாகன ஓட்டிகள் ஏசுவது, பெண் உறுப்பைச் சொல்லித் திட்டுவது, வண்டி ஒடித்து மிரட்டுவது, அரசே நடைபாதையை நீக்கிப் பேருந்து கட்டண உயர்வை ஏற்படுத்துவது என நடப்பவர்கள் இவ்வுலகில் வாழவே கூடாது என்றே அதிகாரமும் நிறுவனங்களும் மிரட்டுகின்றன.
பெருநகர வளர்ச்சி சார்ந்த பெரிய சாலைகள், மோனோ ரயில்கள், மால்கள், கேசினோக்கள் என தாராளவாதக் கோட்பாட்டினை முன் மொழியும் நகரங்கள் அதீத செலவுகளை மேற்கொள்ளும் பிற்போக்குவாத, சாதீய திருமணங்களையும் நிகழ்த்திடும் இடமாகவும் உள்ளன. ஆனால் நகர்ப் பெருக்கம் சரியான திட்டமிடாத நிலையினில் மக்களை அந்நியப் படுத்துதல் கொடிய நிகழ்வாகவே இருக்கும். ஊரக சாலை மேம்பாட்டுக்கு 100 நாள் வேலைத் திட்டம் மோடி அரசால் கைவிடப்பட்டு அகன்ற நாற்கர சாலை மேம்பாடுகள் என்ற பெயரில் நடக்கும் பெரு வீதி அந்நியமாதலை என்ன என்று சொல்வது? கிராம மக்களுக்கு சாலைகள் தேவை இல்லாதவையா?
மற்ற காரணிகளோடு வேலைகள் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் வாக்குறுதி மக்களை நகரங்களுக்கு இழுக்கிறது. உலக மக்கள்தொகையில் அரைவாசி ஏற்கனவே நகரங்களில் வசிக்கின்றனர், 2050-ஆம் ஆண்டில் உலகின் மூன்றில் ஒரு பகுதியினர் நகர்ப்புறங்களில் வாசிக்க நேரும் என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உற்பத்தி அதிகரிப்பு நகரங்களில் மக்கள் எண்ணிக்கை கூடுவதன் காரணம். முதல் உலக நகரங்கள் என்பவை சிறிய மக்கள் தொகையினை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டவை. இரண்டாம் உலக நகரங்களின் தன்மை தொழில் நுட்பக் கூட்டின் காரணமாக வேகமாக வளர்ச்சியடைந்த போதிலும் மூன்றாம் உலக நகரங்கள் பெரும்பாலும் முதலாளித்துவ உற்பத்தி கூர்மைப் பட்டதாலும், கிராம நகர அந்நியமாதல் அதிகரித்ததாலும் விளைந்தன. நகர வாழ்க்கை என்பது ஒரு முழு பெருமை கொண்ட வாழ்வாக மாறிப் போயிற்று. நோம் சோம்ஸ்கி பெருநகர வளர்ச்சியின் விளைவாக இன்னும் கூர்மையடைந்த நிலையில் ராணுவ வளாகக் கட்டமைப்பு தோன்றும் எனும் சமூகவியலாளர் கருத்தினை ஒப்புக் கொள்வதோடு அவை மக்கள் வெவ்வேறு குழுக்களாக அன்னியப் படுத்தவும் கூடும் என்கிறார்.
நகர்ப்புறமயமாக்கல் விகிதம் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பெரிதும் பாதிக்கிறது, இது வறுமையைக் குறைப்பதற்கான செயலில் முக்கியமாகும். நகர்ப்புறமயமாக்கப் பட்ட ஒரு நாடு என்பது அதிக முதலீடுகள் மற்றும் வியாபாரங்கள் குவியும் இடம் என்று பொருள்படும், இது வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது, மேலும் அந்த கருத்தில் வளர்ச்சிக்கு மிகவும் பயனளிக்கும். ஆனால் அமர்த்தியா சென் இத்துடன் முரண்படுகிறார்.
‘வறுமைக் குறைப்பு’ என்றால் என்ன என்பதுதான் பிரச்சனை. வறுமை வருமான அளவுகளால் மட்டுமே அளவிடப்பட்டால், நகர்ப்புறமயமாக்கல் விகிதங்கள் வருமானத்தில் அதிகரிக்கும், இதனால் வறுமைக் குறைப்புக்கு மட்டுமே இது உதவுகிறது. இருப்பினும், அமர்த்தியா சென் மற்றும் பிற பொருளாதார வல்லுனர்களின் கருத்துப்படி, வறுமை பல்வகைப் பரிமாணம் கொண்டது வருமான ஏற்றத்தினை மட்டும் கொண்டு இதனை அளவிட முடியாது. இப் பரிமாணமானது குறைந்த வருமான அளவைக் குறிக்கவில்லை, மாறாக வாய்ப்புகளும் உரிமைகளும் இழப்பதையே அவை குறிப்பிடுகின்றன என்பார் அவர்.
வளரும் நாடுகளில் விரைவான நகரமயமாக்கல் அபாயங்கள்
உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களில் 2050 க்குள் நகரங்களில் 54 சதவிகிதம் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அறிவு சார் செயல்பாடுகளை அடக்கிய திறமையான நகரங்களின் பல நன்மைகள் நன்கு புரிந்துகொள்ளப்பட்டாலும், இந்த விரைவான, அடிக்கடி திட்டமிடப்படாத நகரமயமாக்கல் ஆழ்ந்த சமூக உறுதியற்ற தன்மை, முக்கிய உள்கட்டமைப்புகள், நீர்நிலை நெருக்கடிகள் மற்றும் நோய் பரவக்கூடிய பரவலுக்கான ஆபத்துகளைத் தருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நகர்ப்புறங்களில் இருந்து இந்த திட்டமிடாத மாற்றம் தொடர்ந்து இந்த அபாயங்களை மேலும் அதிகரிக்கலாம்.
இந்த அபாயங்களை எவ்வாறு திறம்பட நிர்வகிக்கச் செய்ய முடியும் என்பதெல்லாம், நகரங்கள் எவ்வாறு ஆளப்படுகின்றன என்பதன் மூலம் தீர்மானிக்கப்படும். மக்கள் தொகை, சொத்துகள், உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவற்றின் அதிகரித்த செறிவு என்பது, நகர அளவில் உள்ள அபாயங்கள், சமுதாயத்தை முன்னெப்போதையும் விட அதிகமாக பாதிக்கும்.
நகரமயமாக்கல் காரணமாக பணிப் பற்றாக்குறை
நகரமயமாக்கல் காரணமாக பணிப் பற்றாக்குறை ஏற்படுகிறது. வணிகங்கள் மற்றும் அரசாங்கங்கள் ஒரு வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமான பணி உருவாக்க முடியாது. வேலையின்மை காரணமாக உடல் பாதுகாப்பு குறைந்து. வறுமை பரவுகிறது மற்றும் அனைத்திலும் முறையான திட்டம் இல்லையென்றால் ஆற்றல் சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி, பொது போக்குவரத்து, கழிவு மேலாண்மை அனைத்தும் சிக்கலுக்குள்ளாகும் .
சூழல் சீர்கேடு
கடும் நுண்துகளிகள் மோட்டார் வாகன எரிபொருள் எரிப்பில் இருந்து வருகின்றன. புகைக்கரி, தூசி, முன்னணி மற்றும் புகை துகள்கள் சுகாதார அச்சுறுத்தல் ஏற்படுத்தும். இதனால் மூளை பாதிப்பு, கற்றல் குறைபாடுகள் மற்றும் குழந்தைகள் அகால மரணம் ஏற்படும். உலக சுகாதார அமைப்பின் படி துகள் செறிவு கன மீட்டருக்கு 90 மைக்ரோகிராம் வரைகுறைவாக இருக்க வேண்டும். துகள் செறிவு 8 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களில் அளவில் மிகுந்து வருகிறது.
பல்லுயிர்க்கு இடர்
நகர வளர்ச்சிபாய்வதால் விலங்கு மற்றும் தாவர வாழ்க்கைக்கு இடர் ஏற்படும். பாயும் இயற்கை பல்வேறு நிலையில் பாதிப்பு அடையும் . சிறிய உயிரினம், ஒவ்வொன்றும் பூமியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்க்கையில் இந்த மாறுபாடு இல்லாமல், மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர். உயிர் பல்வகைமை, கலப்படத்தில் இருந்து நீர் மற்றும் மண் ஆகியவற்றை பாதுகாக்கிறது. கடைகள் மற்றும் நகர் நிறுவனங்கள் ஊட்டச்சத்து மறுசுழற்சியை உடைக்கின்றன மற்றும் மாசுகள் காற்றில் கலந்து அவற்றை உறிஞ்சிப் பேரழிவு உருவாகும்.
நோய்
நகரமயமாக்கல் குறைந்த உடல் உழைப்பு மற்றும் ஆரோக்கியமற்ற ஊட்டச்சத்துக்கு வழிவகுக்கும் 2020-ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு இதய நோய், விகிதம் அதிகரித்துள்ளதையும் வளரும் நாடுகளில் உள்ள அனைத்து இறப்பு 69 சதவீதமாக உள்ளதையும் கணக்கிட்டிருக்கிறது தொற்று அல்லாத நோய்கள் பரவுவதையும் அது கணித்துள்ளது. மற்றொரு நகரமயமாக்கல் தொடர்பான அச்சுறுத்தல் தொற்று நோய்கள். விமான பயணம் மூலம் ஒரு நாட்டில் இருந்து அடுத்த நாட்டிற்கு பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் பரவுவதை உறுதி செய்துள்ளது. கூடுதலாக, கிராமப்புற பகுதிகளில் இருந்து இடம்மாறும் மக்களால் புதிய நோய் தொற்ற காரணம் ஆகும். நோய் எதிர்ப்பும் இதனால் குறையும்
குற்றம் விரைவான நகரமயமாதல் குற்ற அதிகரிப்பை நிகழ்த்தும். வன்முறைகளை அரசு குறைக்க இயலாத நிலை ஏற்படும். அரசு எந்திரம் சரியான நிர்வாக நடவடிக்கை எடுக்கவில்லையெனில் இது அதிகரிக்க வாய்ப்புண்டு; அதே நேரம் குற்றத்தடுப்பு ஊழியர் பற்றாக்குறை குற்றங்களை கட்டுப்படுத்துவதில் குறைபாடுகளை ஏற்படுத்தும்.
இது அச்சமூட்டச் சொல்வதல்ல வளர்ச்சி என்பது சம அளவில் இருக்க வேண்டும் என்பதற்காகச் சொல்வது. கிராமங்கள் மற்றும் நகரங்கள் இடையில் மனிதர் நாம் வேறுபாடு கொள்ள வேண்டியதில்லை அவை இரண்டும் மனிதர் மற்றும் விலங்கு போன்ற பல்லுயிர் நன்கு வாழ இயற்கை உருவாக்கிய வெவ்வேறு நிலங்களாகும்.
கல்வி
கல்வி மற்றும் திறன் போதித்தலில் நகரமயமாதலால் அநேகம் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. சரியாக திட்டமிடாத கல்வி, நகர்மயமாதல் இடர் களைய வலுவற்றதாகிறது. உதாரணமாக நகர் பெருக்கம் ஒன்றை மட்டும் மனதில் கொண்டு கட்டிடப் பொறியியல். கட்டிட கலை ஆகியன போதிக்கப் படுகின்றன. ஆனால் நகரக் கழிவு மேலாண்மை இத்துடன் செயலாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. நகர்ப் பெருக்கத்திற்கான கட்டிடவியல் கற்பதுடன் நகரின் திட்டவியலையும் பொறியாளர்கள் கணக்கில்கில் கொள்ள வேண்டும். ஒரு நகரில் பெருங்கட்டிடங்கள் அவசியமா? எவ்வளவு இடத்தினை மனிதர், விலங்கு மற்றும் தாவரங்களுக்கு என ஒதுக்க வேண்டும் என்ற திட்டத்தினை நகர வளர்ச்சிக் குழுமம் தொலை நோக்கோடு காணவேண்டும். எனவே நகரியம் என்னும் ஆய்வு பல்கலைக் கழகங்களில் நிகழ்த்தப் பெற்று அதன் மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே இத்தகு செயல் வடிவாக்கம் உருவாக வேண்டும்.
ஐ நா நகர்மயம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை என்ன
நகர்ப்புற வளர்ச்சி நன்மைகளை உறுதிப்படுத்த அரசாங்கங்கள் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்
மக்கள்தொகை பரவலான விநியோகத்தை திட்டமிட்டு நிர்வகிக்க பல்வேறுபட்ட கொள்கைகள் மற்றும் உள்நாட்டு இடம்பெயர்வு தேவை.
நகர்ப்புற வளர்ச்சியை இன்னும் சீரான முறையில் விநியோகம் செய்வதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகள், அதிகப்படியான செலவினத்தைத் தவிர்க்கின்றன.
ஒரு நாட்டிற்குள்ளேயே ஒன்று அல்லது இரண்டு மிகப்பெரிய நகர்ப்புற பெருமளவில் கூட்டம் கூடுகிறது. அதனை சீரமைக்க வேணடும்.
2000 ஆம் ஆண்டு முதல் சில நகரங்கள் மக்கள்தொகை சரிவை சந்தித்திருக்கின்றன, அவற்றில் பெரும்பாலானவை, ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் குறைவான இனப்பெருக்க நாடுகளில் குடியேறிய அல்லது குறைந்து வரும் மக்களால் அமைந்துள்ளது.
உலகம் முழுவதும் ஐந்து நகர்ப்புறவாசிகளில் ஒருவர் ஒரு நடுத்தரமான ஐந்தாயிரம் மாத வருமானத்தில் வாழ்கிறார்.
அரசுகளின் மெய்யான சமூக ஆர்வம் மற்றும் மக்களின் சமநிலையாக்கமே இதற்கு சரியான தீர்வு.
தொற்று நோயில் நகர்மயம்
நகரமே கொரோனாத் தொற்று நோயை இங்கு கொண்டு வந்து பரப்பியது. தொற்று வைரஸ் எங்கும் பரவ நகர மனிதரே காரணம். அயல்நாடுகளில் இருந்து தொழில் முனைப்பு மற்றும் நடுத்தர வர்க்கம், பணக்கார வர்க்கம் ஆகியோரே தொற்று வெவ்வேறு நாடுகளில் பரவ – அவர்கள் மேற்கொள்ளும் விமானப் பபணம் காரணமாக, நகர் தொற்றுக்கு உள்ளான பின் அது நகரின் அனைத்து கட்டமைப்புகளிலும் பரவத் தொடங்குகிறது… முக்கியமாக ஏழ்மையான, விளிம்பு நிலை மனிதர்கள் அது பற்றி அதிக விழிப்புணர்வு இல்லாத நிலையில் அவர்கள் மத்தியில் மிக வேகமாகப் பரவுகிறது. மேலும் இத்தகைய பகுதிகள் அடர்த்தியாக மனிதர்களால் நிறைந்தவை. எனவே தொற்று வரைமுறை இன்றி அதிகமாக ஆகிறது.
நடுத்தர வர்க்க, பணக்கார வர்க்க மனிதர் வாழும் பகுதிகள் அடர்த்தி குறைவானவை. இப்போது சிகிச்சையின் முதல் நிலை தனிமைப் படுத்துதல் மற்றும் இடைவெளி ஆக்கம்… சமூக இடைவெளி ஏற்கனவே மனிதர்களுக்கு இடையில் உள்ள போது தொற்று சார் சமூக இடைவெளி என்பது வலியுறுத்ததப் படுகிறது. சமூக இடைவெளி சற்று வசதியான மனிதர்களுக்கு இடையில் பெரிய வீடுகள் உள்ளபோது அது எதிர் விளைவுகளை அவ்வளவாக உருவாக்குவது இல்லை. அது எளிதாக அவர்களுக்கு இடையில் கடைப்பிடிக்கப்பட்டு விடும். ஆனால் வாழும் பகுதியும் அது சார்ந்த வெளியும் குறைவாக உள்ள மனிதர்கள், ஏழ்மை நிலையில் இருப்போர் சமூக இடைவெளி கடை பிடித்தல் உள்ளும் புறமும் இதனை நிகழ்த்துதல் மிகச் சவாலான ஒன்று.
இந்நிலையில் அவர்கள் கடைபிடிக்க நினைக்கும் இடைவெளி என்பது அசையா இடைவெளி ஆகும். ஒரு இடத்தில் நிலைத்து இருப்பது மட்டும் அல்ல அங்கிருந்து அசைவின்றி அல்லது வழக்கமான வாழ்நிலை நிகழும் இடங்களுக்கும் அவர்களால் செல்ல இயலாது. இது ஓரளவு நடுத்ததர வர்க்க பணக்கார வர்க்க நிலைகளைப் பாதித்தல் குறைவாக உள்ளது – காரணம் அவர்களால் இணையத்தின் மூலம் தங்களால் தங்கள் தொழிலைச் செய்து கொள்ளமுடியும். இந்த வாய்ப்பு சமூகத்தின் கடைநிலை மனிதருக்கு சாத்தியம் இல்லை. அவர்கள் தம்மிடம் கொண்டுள்ள எளிய கருவிகளில் பெரும்பாலும் சக்கரதத்தின் மேல் உள்ளவை. ஆகவே சக்கர வடிவிலானவை என்பதால் நகர்ச்சி இதற்கு அவசியம். ஆகவே புல மாற்றம் இல்லாமல் வாழல்நிலை சாத்தியம் ஆகாது.
அடைப்பு மண்டலங்கள்
அடைப்பு மண்டலங்கள் உருவாக்கப்பட்டு மக்கள் வாழும் பகுதிகள் பல்வேறு அடுக்குகளாக அடைப்புக்குள் கொண்டு வரப்படும். இதில் மாறுபட்ட பகுதிகளில் மாறுபட்ட நிலையினில் கட்டுப்பாடு, மற்றும் தடுப்புகள் உருவாக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் கட்டுப் படுத்தப்படுகிறது. தொற்று எந்த நிலையில் உள்ளதோ அத்தகைய கட்டுப்பட்ட பகுதிக்குள் வாழ்வோர் அவ்வகைத் தொற்றை ஏற்க வேண்டிய கடப்பாடு இதனால் உருவாகிறது. எனினும் இன்றைக்கு வளர்ச்சியடைந்த நாடுகள், தமிழகம் உட்பட சிக்கிச்சையின் தரம் இந்த இடர்களை விரைந்து களைய உதவுகிறது.
COVID-19 பற்றி எழுதிய முதலில் கணித்து எழுதியவருள் ஸ்லாவோஜ் ஷிசெக் ஒருவர். COVID-19 உலகை உலுக்கிய போது, அவர் சில தற்காலிக கணிப்புகளை வழங்கினார்.
தொற்றுநோய் நமது அறிவைக் கூர்மை மிக்கதாக மாற்ற இயலாது எளிதில் இயல்பு நிலைக்கு நாம் திரும்ப முடியாது. இதற்கு ஆழமான பொருளைத் தேடுவது தவறு. உடல் ரீதியான தொலைவு “மற்றவர்களுடனான நமது தொடர்பின் தீவிரத்தை எவ்வாறு பலப்படுத்தக்கூடும்” என்று ஷிசெக் வியப்படைந்தார்?. ’’மக்கள் மற்றும் விஞ்ஞானத்தின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில்” ஒரு புதிய உலகளாவிய ஒற்றுமையின் பிறப்பை இந்த தொற்றுநோய் துரிதப்படுத்தும் என்றும் கூற இயலாது என்கிறார் அவர்… மாறாக, COVID-19 போட்டிகளைக் கூர்மையாக்கியது, கூட்டணிகளை பலவீனப்படுத்தியது மற்றும் தேசியவாதங்களை தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால் “கொடூரமான நிகழ்வுகள் கூட கணிக்க முடியாத நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்” என்று ஷிசெக் சொல்வது சரியானது.
அவ்வாறே COVID-19 தடுப்பூசிகள் இப்படி உருகவாக்கப்பட்டுள்ளன.
ஷிசெக் கருத்துப்படி, மூன்று களங்களில் – தொற்றுநோய், சுற்றுச்சூழல் நெருக்கடி மற்றும் இனவாதம். ஆகியவற்றின் மீது ஒரு “முக்கியமான கருத்தியல் மற்றும் அரசியல் போர்” நடத்தி மூன்று களங்களின் அடிப்படை ஒற்றுமையை ஒருவர் வலியுறுத்த வேண்டும்”, என்று அவர் வாதிடுகிறார். தற்போதைய நெருக்கடியின் தோற்றத்தைப் புரிந்துகொள்ள இந்த சிக்கலானது முக்கியமானது. அதை முழுமையாக விளக்க எந்த ஒரு காரணமும் இல்லை. அவரது கீழ்க்காணும் கணிப்புகள் இன்று முக்கியமானவை.
அவருடைய முதலாவதான கணிப்பு தொற்று குறித்த முன்னறிவிப்புகள் என்பது “ஒரு அமைப்பின் கூட்டு செயல்பாட்டிலிருந்து எழுகின்றன, ஆனால் அவை அந்த அமைப்பின் எந்த ஒரு பகுதியையும் சேர்ந்தவை அல்ல”. இரண்டாவதாக, தொற்று ஒரு குறிப்பிட்ட பொருளாதார தருணத்தில் வந்தது. “விளைவாக ஒரு அபத்தமான முதலாளித்துவ நெருக்கடி எற்பட்டுள்ளது என அவர் கருத்துத் தெரிவிக்கிறார்.” முந்தைய மார்க்சீய மதிப்பீடுகளுக்கு மாறாக ஒரு – பொருளாதார ரீதியாக ஓரங்கட்டப்பட்ட – புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஒரு புதிய வர்க்கம், ஒரு “புவி-சமூக வர்க்கம்”, உருவாகியுள்ளது. விளைவாக இது “வர்க்க இருத்தலின் புதிய வடிவங்களை உருவாக்கும்” என்று ஷிசெக் கணித்துள்ளார். அடைப்புக்குட்பட்ட உலகெங்கும் உருவாக்கப்பட்ட பகுதிகள் பூட்டப் பட்டவை என்பார் அவர்.
ஷிசெக்கின் மூன்றாவது கருப்பொருள் நம்மை மனிதர்களாகக் கருதுகிறது: “மேற்கில் நாம் மரணத்தை வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்கிறோம்”. மேலும் “உள்ளீடட்ற்ற இந்த வாழ்க்கைக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய நாம் தயாராக இருப்பதாகத் தெரிகிறது”. எல்லா விலையிலும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான அந்த உறுதிப்பாடு குறைந்து வருவதாகத் தெரிகிறது. ஆனால் “உள்ளீடட்ற்ற வாழ்க்கை” மீது நாம் எந்த அளவிற்கு மரணத்தைத் தேர்ந்தெடுப்போம் என்பது நிச்சயமற்றது. நான்காவதாக, அறிவியலுக்கும் அரசியலுக்கும் இடையிலான பிளவு குறித்து அவர் கேள்விகளைக் கேட்கிறார். விஞ்ஞானிகள் மிகைப்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்- “மனித சுதந்திரத்திற்கும் கண்ணியத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கக் கூடாது என்பதற்காக விஞ்ஞானத்தின் உரையாடல்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும்”. தொற்றுநோய்க்கான சரியான அணுகுமுறையில் விஞ்ஞானமே பிளவுபட்டுள்ளது என்பதை அவர் நமக்கு நினைவூட்டுகிறார்.
அவரது எடுத்துக்காட்டுகள் அமெரிக்கா மற்றும் சுவீடன் ஆகும், அதன் அதிகாரிகள் “COVID-19 க்கு, குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு, பொருளாதாரத்தையும் சாதாரண வாழ்க்கையின் தோற்றத்தையும் பராமரிக்க ஆயிரக்கணக்கான உயிர்களை தியாகம் செய்ய முடிவு செய்தனர்”. இறுதியாக, அவர். COVID-19 “ஒரு புதிய தொடக்கத்தைக் கண்டுபிடிக்க நம்மைத் தூண்டும் ஒரு பேரழிவு” என்ற தரவு நிரூபிக்கும் என்பதை அவர் மிகவும் சந்தேகிக்கிறார்.