நிர்பயா – 2
இரா.மோகன்ராஜன்
நீ என்பது
நீ அல்ல.
நீ என்பது
உன் முகம்
அல்ல.
நீ என்பது
அறுக்கப்பட்ட
உனது நாவுமட்டுமல்ல.
நீ என்பது
முறிக்கப்பட்ட
உனது கால்கள்
மட்டுமல்ல.
நீ என்பது
உடைத்து நொறுக்கப்பட்ட
உணர்விழந்த
உனது தண்டுவடம் மட்டுமல்ல.
உன் முகமும் கூட
நீயல்ல.
நீ என்பது
உன் முகம் கூடவல்ல.
நீ என்பது
உனது
முலையல்ல.
நீ என்பது உனது
யோனியல்ல.
கெஞ்சும் கண்களோ
கதறும் குரலோ
உன்னுடையவையாக
இருக்கமுடியாது.
கூப்பிய கரங்கள்
கூரிய நகங்கள்
உனக்குரியவை
அல்ல.
நீ என்பது
உன் உடல் அல்ல.
கிழிக்கப்பட்ட
உன் உடல் என்பது
உன்னுடையதல்ல.
பெண் என்பது
மட்டுமேயல்லநீ.
நீ என்பது
உன் மதம்.
நீ என்பது
உன் சாதி
நீ என்பது
உன் சேரி
நீ என்பது
உனது தெரு
நீ என்பது
உனக்கான
நீர்குட்டை.
நீ என்பது உனது
வாழத் தகுதியற்ற
குடிசை.
நீ என்பது
உனது உணவு.
நீ என்பது ஒரு
எலி.
நீ என்பது உனது
தொழில்.
நீ என்பது
முசாபிர்
நீ என்பது
நீ மட்டுமேயல்ல.