புளியம்பழமும் சிறுமியும்…!
Posted On November 15, 2021
0
83 Views
-இரா.மோகன்ராஜன்
புளியம்பழத்தின் சுவையை அறிந்த சிறுமி அதன் மரத்தைப் பார்க்க பெரு விருப்புக் கொண்டாள். புளிய மரத்தைத் தேடி அலைந்த ஊர் பெயர்களில் புளி இருந்ததே தவிர புளிய மரம் இருக்கவில்லை. புளி இருந்த இடங்களிலோ மரங்கள் இருக்கவில்லை. முன்பு புளிய மரம் இருந்த இடம் என்று சிலர் அலைபேசி கோபுரங்களைக் காட்டினர் அலைபேசி இருந்த இடங்களோ பின்பு ஒருபோதும் புளிய மரங்கள் காய்க்கும் இடங்களாக இருக்கவில்லை. புதிய கோபுரங்கள் கிளைக்குமிடங்களில் புளியம் விதைகள் முளைத்திருக்கவில்லை. சாலையை அகலப்படுத்தவென பிடுங்கியெறியப்பட்ட நூற்றாண்டு மரங்களில் புளிகள், கிளிகள் எதுவும் எஞ்சியிருக்கவில்லை. சாலை மறியலுக்கென குறுக்கில் போடப்பட்ட வேர்களில் தீவைத்த மரத்திலோ பூக்கள் சாம்பலாகியிருந்தன. புளி என்றாலே நாவூறிய சிறுமி புளியமரம் காணது வீடு திரும்பியவள் தனது பள்ளிக் கட்டுரைக்கென இப்படி எழுதியிருக்கக் கூடும்: புளியம் பழங்கள் மெய்யாகவே சூப்பர் மால்களின் அலமாரியில் பழுக்கின்றன.
Trending Now
மரணிக்க மறுத்த பேராசிரியர் சாய்பாபா
November 4, 2024
பேராசிரியர் G.N. சாய்பாபா கவிதைகள்
November 4, 2024