நடப்பில் நிலவிவரும் அன்றாட நிலவரங்களின் மீதான அதிருப்தியுடன் அவற்றுக்கு எதிரான தனது எதிர்ப்புப் பிரகடனத்தை கலை எப்போதுமே பிறப்பித்துக் கொண்டு வந்திருக்கிறது. வரலாறு நெடுக, ஓவியக் கலைஞர்கள் தமது கலையை அநீதிகளையும், அசமத்துவங்களையும் விமரிசிக்கவும், அவற்றை எதிர்க்கவும் பயன்படுத்தியே வந்திருக்கின்றனர். அவர்களுடைய கலை மறுதலிப்பின் ஒரு நடவடிக்கையே; ஆனால், அதனிலும் மேலதிகமான முக்கியத்துவம் வாய்ந்த வகையில் […]