கூண்டு திறக்கப்பட்ட பறவை ஒன்றின் சிறகசைப்பைப் போன்று இருக்கிறது பேரறிவாளனின் உடல் மொழி. காற்று நுழையாதச் சிறை சுவற்றுக்கு வெளியே வந்து நன்கு மூச்சிழுத்துவிடும் நபராகக் காட்சியளிக்கிறார் பேரறிவாளன். 31 ஆண்டுகள் வாழ்வைத் தனிமைச் சிறை தின்றுவிட்டது. திருப்பித்தர இயலாத நாட்களை குற்றவாளி என்ற சொல் கிழித்தெறிந்துவிட்டது. மரணத்தைச் சுமந்து கொண்டிருந்தவனின் துயரத்தை யாதொருவராலும் பகிர்ந்து […]












