ஒவ்வொரு நிறுவனமும் ஒரு கனவுடன் தொடங்கப்படும். டாடாவின் நிறுவனங்கள் எல்லாம் கனவுடன் தொடங்கப்பட்டவைதான். டாடா நிறுவனங்களில் வேலை பார்க்கவரும் ஊழியர்களும் ஒரு கனவோடுதான் வருவார்கள். ஏனென்றால் டாடாவின் நிறுவனத்தில் வேலை பார்க்கும்வரை வேலைக்கு எப்போதும் உத்தரவாதம் உண்டு. மற்ற நிறுவனங்களில் வழங்கப்படும் ஊதியங்களை விட சற்றே குறைவான சம்பளம் வழங்கப்பட்டாலும்கூட அங்கு வேலைக்கு உத்தரவாதம் உண்டு. […]











