-யமுனா ராஜேந்திரன் பிரித்தானியச் சுரங்க ரயில்களில் பயணம் செய்கிறபோது குழந்தைகளைத் தோளில் சுமந்தபடி அடர்த்தியான வர்ணங்களில் உடை அணிந்தபடி பயணிகளிடம் பிச்சை கேட்கும் பெண்களை முகச்சுளிப்புடன் எதிர் கொண்டிருந்ததை எவரும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும். அழுக்கான குழந்தைகளானாலும் அழகான குழந்தைகள் பிச்சையெடுக்கிறபோது அக்குழந்தையின் தாயின் மீது கோபம் வரவும் செய்யும். மஞ்சள் […]