பாடல்-1 நிலம் பூத்த காலையில்உன் பிறப்பின் சேதிஎனக்கு சொல்லப்பட்டது மகளே!முன்னொரு நாளில்நிலமிழந்தவனின் பாதம்கரைதேடி கடல்மீதுநிலைகொள்ளாதிருந்ததைமீண்டும் உணர்ந்தன.வெயிலேறித் தகித்த கோடை நாளில்வாரி அணைத்தபோதுஇந்த உலகமேசுபிட்சமாயிருந்தது.உனையேந்தியஎன் கரங்களில்இழந்துபோன என் நிலம்புன்னகைக்கக் கண்டேன். பாடல்-2 தாயொடு தனித்திருக்கும்சேயுன் மனம்அச்சத்தில் இருப்பதை அறிகிறேன்.துள்ளியோடும் மென்பாதங்களின்தவிப்பு புரிகிறது மகளே.கொடுநோய்க் காலம்தான் இது.பள்ளியின் நண்பர்களை மட்டுமல்லவீட்டருகாமை நண்பர்களையும்பாராதிருக்கும் இக்காலத்தேநேரலை வகுப்புகள்உன்னம்மைக்கும் பெரும்சுமைதான். பாடல்-3 வேப்பம் […]