தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகள் மற்றும், அரசு, தனியார் மருத்துவமனைகள் கொரோனா பெருந்தொற்று நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. ஒரு இசைநாற்காலி போல ஆகியிருக்கிறது நோயாளிகளுக்கான படுக்கைகள். சகல திசைகளிலிருந்தும் தொற்றுக்கு ஆளானோர் மருத்துவமனைகளை முற்றுகையிட்டுக் கொண்டுள்ளனர். கிட்டதட்ட ஒரு ஆழிப்பேரலையின் அவலம் போல இருக்கிறது. பேரிடர், பெரும் போர்களில் காயம்பட்டவர்கள் போல மக்கள் மருத்துவமனைகளில் வதியழிகிறார்கள். பதட்டம் […]