புத்தனும் அவனது நவீன சீடர்களும்…!
Posted On November 15, 2021
0
145 Views
![]()
– இரா.மோகன்ராஜன்
சாலையோரம் நாயொன்று பரிதாபமாக இறந்துக் கிடப்பதாக உணர்வுப் பொங்க ஓடிவந்து சொன்ன சீடனைக் கையமர்த்தி பிறிதொரு சீடனைப் பார்த்துவர அனுப்பினான் முகக்குறியற்ற கவுதமப் புத்தன். திரும்பி வந்த சீடன் அது கொரோனாப் பெருந்தொற்றுக்கு ஆளாகியிருக்கிறது. அதன் நாவில் தொற்றின் வீச்சமும் கண்களில் இவ்வுலகுக் குறித்த அச்சமும் உறைந்திருக்கின்றன என்றான் பதட்டத்துடன். புத்தன் மவுனமாக இன்னுமொரு சீடனைப் பார்த்துவர அனுப்பினான். அந்த சீடன் வந்து சொன்னதாவது, குருவே அதன் பற்கள் கோரமாக சிதைந்திருக்கின்றன. இடுப்பெலும்புகள் நொருங்கிவிட்டன. சாலை விபத்தில் அது இறந்திருக்கக்கூடும் என்றான் விழிகள் விரிய. பிறகும் அய்யம் நீங்கா புத்தன் அந்நாயை அடக்கம் செய்ய முன்வராதவர்களே... அதன் இரைப்பையை யாராவது பார்த்தீர்களா என்றான். சீடர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். குட்டிகளுக்குப் பாலூட்டும் அந்த நாய் ஏன் பசியில் இறந்திருக்கக் கூடாது எனக் கேட்ட புத்தன் மேலும் சொல்வான், உங்கள் வீட்டுத் தொலைக் காட்சிப் பெட்டிகளைச் சற்றே மூடிவையுங்கள்.!
Trending Now
பிரபஞ்சத்தின் உயிர்சக்தி தாவோ
November 18, 2025
ஓஷோ விளக்கும் தாவோவின் ஞானம்
November 16, 2025





