தமிழ் இந்துவுக்காக தோழர் எஸ்.வி. ராஜதுரை அவர்களின் சுருக்கமான வரலாற்றை எழுதுவதற்காக, அவரின் எழுத்துகளை மீண்டும் ஒருமுறை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தோழர் எஸ். வி. ஆர் தமிழ்ச்சமுதாயத்திற்கும், தமிழ்நாட்டு இடது இலக்கியத்திற்கும், பிற மொழிகளிலிருந்து தமிழுக்குக் கொண்டுவந்திருக்கும் பல்வகை மொழியாக்கத்திற்கும், மனித உரிமைப் பணிகளுக்கும் அவர் ஆற்றியுள்ள பங்கைக் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது. […]













