தமிழ் இலக்கியத்தில் போர் இலக்கியத்திற்கு ஈராயிரம் ஆண்டு பாரம்பரியம் இருக்கிறது. புறநானூற்றுக்குப் பிறகு போரினை மையம் கொண்ட படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் விரல்சுட்டும் அளவில்கூட இல்லை. சமகாலத்தில் ஈழப்போர் அதற்கான வாய்ப்பை வழங்கியிருப்பதாகவே தெரிகிறது. குணா கவியழகன் இந்த போர் இலக்கியங்களில் தவிர்க்கவே முடியாதவராக தனது ஐந்து நாவல்களினூடாக சாட்சியமாக்கியிருக்கிறார். நஞ்சுண்ட காடு, விடமேறிய கனவு, […]