பிள்ளை யாரப்பா ?
Posted On October 23, 2021
0
55 Views

வெற்றி பெற்ற மகன்கள் திரையிலும்
போராடும் தகப்பன்கள் தரையிலுமாய்
கெலிப்பும் தவிப்புமென
விரிகிறது திரை
பார்வையாளர் பல கோடி
என் பக்கத்தில்
அமர்ந்திருப்பவர்
என்னிடம்
புரியவில்லை என்கிறார்
அவரிடம்
எப்படி புரியவைப்பேன்
இக் கவிதையை ?
சிறைக் கொட்டடியில்
மகனைப் பார்க்க வந்த
தன்னைப் பார்க்க
கூடிய கூட்டத்தை
கும்பிட்டபடி கடக்கும்
தந்தையை தெரியும் என்றும்
20 – 20 கிரிக்கெட் கோப்பை
பரிசு வழங்கும் பெருமகனின்
மட்டை ஆட்ட பின்னணி
தெரியாதென்றும்
சொல்பவரிடத்தில்
யார் யாரெனத்
தெரிவதும்
ஏன் இப்படியெனப் புரிவதும் ஒன்றல்ல
என்பதை எப்படிச் சொல்ல ?