குளவி கொட்டிய இரவு
Posted On November 15, 2021
0
46 Views
![]()
ச. மருதுதுரை
கொட்டிய குளவி
வீங்கிய விரல்
நீங்கா வலி
தாங்கிதான் நடக்க
அச்சச்சோ… செருப்ப தட்டி பாத்து
போடக்கூடாதா ?
உன் விசாரிப்பில்
விடியல் தூறலும் சேர நனைந்தபடி
கடக்கிறேன்
எங்கிருந்தோ ஓடிவந்து
என் பாதம் பிடித்து
கதறியபடி அம்மா
தன் வலி பொறுத்து
என் வலி தாளா
அம்மா இந்நேரம்
என் விரலிடுக்கில்
சுண்ணாம்பு வைத்து
மஞ்சள் பத்து போட்டு
ஒத்தடம் கொடுத்து
பயணம் ரத்து
செய்யச்சொல்லி
அக் குளவியை திட்டி
யார் கண் பட்டுச்சோ என்றே திருஷ்டி
சுத்தி போட்டு
எல்லாம் நினைவில் வர
இல்லாமல் போனது அம்மாவிடம்
வழக்கமாய்
எரிந்து விழும் நான் மட்டும்தான்
சுமைப்பையும்
குளவி வலியும்
தாங்கியபடி நடக்கிறேன்
என்னை இறக்கிவிட்ட
இரயில் புறப்பட்டு சென்று விட்டது.
நடைமேடை காத்திருப்பில்
மழைத்துளிகளும் நானும்
Trending Now
பிரபஞ்சத்தின் உயிர்சக்தி தாவோ
November 18, 2025
ஓஷோ விளக்கும் தாவோவின் ஞானம்
November 16, 2025





