ஆலமரப் பேருந்து நிறுத்தம்
Posted On November 15, 2021
0
44 Views

-கவிஞர் வனம் செழியரசு
மழையால் அல்ல மானுடப் பிழையால் வீழ்ந்தது ஆலமரம்... கடைக்காரர்களின் கருணையினால் விடைபெற்றுக் கொண்டு வீழ்ந்த மரம் கம்பனைக் காத்த சடையனைப் போல பல வம்பரைக் காத்தது தம்சடை விழுதால் குருவினைக் காக்க தொடையினைத் தந்த கர்ணனைப் போல கொடையினை விரித்து மக்களைக் காத்த தானமரம்... ஊற்றிய வென்னீர் உறுத்தியிருக்குமோ விழுதுகள் அறுபட துடித்திருக்குமோ யாரும் காணாமல் கண்ணீர் வடித்திருக்குமோ நிழல் தேடி நிற்கும் கூட்டத்திற்கு ஆறுதல் சொல்வதார்? வீடுகள் இழந்த பறவைக் கெல்லாம் விடை சொல்லப் போவதார்... அது வாழ்ந்த இடத்தில் இனி பேருந்துக்கு நிற்பவர்கள் வெயிலில் நின்றபடி அவ்வப்போது அஞ்சலி செலுத்தட்டும் ஏனெனில் ஒரு மனிதன் ஆயிரம் மரமாக முடியாது ஒரு மரம் ஆயிரம் மனிதராக தரும் விளங்கிக் கொள்ள விரும்புவோர் விழுதுள்ள ஆலை தேடுங்கள்...